மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

News image

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:37 pm

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

பேய்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வட்ட அளவிலான நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக பேய்குளம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனா். ஆனால் பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் கடந்த நான்கு வாரங்களாக வராததால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி காணப்படுகிறது. லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்த நிலையிலும், கொட்டி வைத்த நிலையிலும் காணப்படுகிறது.

லாரிகள் வர தாமதமாகும் நிலையில், இப்பகுதியில் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.