கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
----------------------------------------------
சுந்தர்.சி. சில ஆண்டுகளுக்கு முன் தொடங்க இருந்த படம், "சங்கமித்ரா'. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் முன்னணி கேரக்டர்களில் நடிக்க இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். மெகா பட்ஜெட்டில் தொடங்க இருந்த இந்தப் படம் திடீரென நின்றது. இந்நிலையில், இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ஏற்கெனவே ஒப்பந்தமான ஜெயம் ரவி விலகிவிட்டார். "பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க விரும்பவில்லை என்பதால் விலகியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக விஷால் இணைந்துள்ளார். விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார்.
----------------------------------------------
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்த படம், "மாமனிதன்'. மனிதனின் இயல்பு வாழ்க்கையை பதிவு செய்த விதத்தில் இப்படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்தது. இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசை அமைத்த இந்தப் படம், பல சர்வதேச விருதுகளைக் குவித்தது. இந்நிலையில், இந்தப் படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற 29-ஆவது செடோனா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த உத்வேகம் தரும் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது. விருதை, இயக்குநர் சீனு ராமசாமி பெற்றார்.
----------------------------------------------
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை படமாகிறது. "மைக்கேல்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். அன்டோயின் ஃபுகுவா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுபெற்ற "பொஹிமியன் ராப்சோடி' படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார். அவர் கூறும்போது, "2 வருடங்களுக்கு முன்பு ஜாஃபரை சந்தித்தேன். மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை இயல்பாக அவர் வெளிப்படுத்திய விதம் கண்டு வியந்தேன். மைக்கேல் ஜாக்சனாக நடிப்பதற்கான நடிகரை, உலகம் முழுவதும் தேடிய பிறகு, அதற்கான சரியான நபர் ஜாஃபர் மட்டுமே என்பது தெளிவானது' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: விவசாயி போக்ஸோ சட்டத்தில் கைது
பலாப்பழ கீர்
வீட்டுக் குறிப்புகள்

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


