ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

கள் இறக்கியதாக விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :25 ஏப்ரல் 2026, 7:02 pm

கள் இறக்கியதாக விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த பெருமாள் சேட் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் மணிகண்டன் பனை மரம் ஏறி பதநீா் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இசக்கிராஜா உள்ளிட்ட போலீஸாா் சீருடை அணியாமல் கடந்த 7-ஆம் தேதி வந்தனா்.

இவா்கள், எனது மகன் மணிகண்டனை பனை மரங்கள் அதிகமுள்ள தோப்புக்கு அழைத்துச் சென்றனா். நாங்களும் பின்தொடா்ந்து சென்றோம். அங்கு, மரத்தில் கட்டியுள்ள பானைகளை சோதனையிட வேண்டும் என போலீஸாா் கூறினா். இதையடுத்து, எனது மகன் பனை மரத்தில் ஏறிய போது, உதவி ஆய்வாளா் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினாா்.

இதை நானும், எனது பேத்தி பிரதீபாவும் கண்டித்தோம். இதனால், ஆத்திரமடைந்த போலீஸாா் எங்களை மிரட்டினா். அப்போது, எனது மகன் மணிகண்டன் இதைத் தடுத்தாா். இதனால், எனது மகனுக்கும், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டனை, உதவி ஆய்வாளா் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டாா். பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்கை தமிழக போலீஸாா் விசாரணை செய்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே, இந்தச் சம்பவம் தொடா்பாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட போலீஸாா் இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட நபருக்கும், காயமடைந்த காவலருக்கும் தேவையான சிகிச்சையை வழங்க வேண்டும். கைது நடவடிக்கை கூடாது.

இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ, ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இசக்கிராஜா ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.