காதல் பாடல்களுக்குப் புதிய பரிமாணம் கொடுத்தவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். "கேகே' என்று அழைக்கப்பட்ட இவர் தமிழில் குறைவாக (சுமார் 60 பாடல்கள்) பாடியதால் தமிழ் ஊடகங்களில் தனக்கான இடத்தைப் பிடிக்காதவர்.
இவர் மறைவுக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்ட அஞ்சலி மூலமாகத்தான் தமிழில் கேகே பாடியிருக்கும் ஹிட் பாடல்ககளின் பட்டியலை அறிய முடிகிறது.
திரைத் துறையில் அறிமுகம் ஆவதற்கு முன்பு கேகே சுமார் 3,500 விளம்பரப் பாடல்களை உருவாக்கிப் பாடியுள்ளார். பூர்விகம் கேரளம் என்றாலும் வளர்ந்தது தில்லியில்!
ஹிந்தியில் அதிகமாகப் பாடியிருக்கிறார். கேகேயை தமிழில் ஏ. ஆர். ரஹ்மான் "மின்சாரக் கனவு' படத்தில் பாட வைத்து அறிமுகம் செய்துவைத்தார். தமிழகத்தின் அனைத்து இசை அமைப்பாளர்கள் இசை அமைப்பில் கேகே பாடியிருக்கிறார். இளைய தலைமுறை தமிழ் நடிகர்களுக்கும் அவர்கள் குரலுக்கு ஏற்றபடி மாற்றி பாடியிருக்கிறார்.
காதல் பாடல்களை உருகி பாடிய இவர் குத்து பாடல்களிலும் திறமையை வெளிப்படுத்தினார். கேரளத்தவராக இருந்தாலும் மலையாளத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பாடியிருக்கிறார்.
தனது பள்ளி வகுப்புத் தோழியான ஜோதி லட்சுமி கிருஷ்ணாவிடம் ஈர்ப்பு ஏற்பட்ட கேகே, வசீகரமாகப் பாடி கவர்ந்தார். திருமணமும் செய்து கொண்டார். மகன் நகுல் பாடகராகவும், மகள் தாமரை பியானோ இசைக் கலைஞியாகவும் உருவெடுத்துள்ளனர்.
கேகேக்கு புகை பிடித்தல், மது பழக்கமும் கிடையாது. தனது குழுவினர் "புகை பிடித்தால் கொஞ்ச நேரத்துக்கு எனது அருகில் வராதீர்கள்' என்று நிபந்தனை போட்டிருந்தார். அப்படியிருந்தவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து கவலைப்படாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.
நிகழ்ச்சியில் "எனக்கு ஒரேயடியாக வியர்க்கிறது' என்று கேகே சொன்னதும் நேரடியாக ஹோட்டலுக்குப் போகாமல், மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஒருவேளை உயிர் தப்பியிருக்கலாம்.
இந்த ஆண்டு மறைந்த இசைக் கலைஞர்களான லதா மங்கேஷ்கர், பப்பி லகரி, சித்து மூஸ் வாலா பட்டியலில் கேகே இடம் பிடிக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டதோ..?
"தி லெஜண்ட்' படத்தில் கேகே பாடியிருக்கும் "கொஞ்சி .... கொஞ்சி ' என்பதே கேகே பாடிய கடைசித் தமிழ் பாடல். மிகவும் பிரபலமாகிவிட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


