அதிக ஒலியை எழுப்பக் கூடிய பாண்டு வாத்தியம், மேளம், கிடார், தபலா, டிரம்பட் போன்ற இசைக் கருவிகளை இசைக்கக் கூடிய குழுவில் நீண்டகாலம் வேலை செய்பவர்களுக்கும், ரயில் ஓடும் சத்தம், பஸ் ஆட்டோ, ஒலிபெருக்கி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் சத்தத்தை அடிக்கடி கேட்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள வீட்டின் அமைப்பு கொண்டவர்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதை தோன்றக் கூடும். செவியின் வழியாக மூளையில் ஏற்படும் அதிர்வுகளின் பிரதிபலிப்பு, அவர்கள் அமைதியான சூழ்நிலைக்கு மாறினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. காதினுள் இருக்கக் கூடிய நரம்புகள், இது போன்ற தொடர் ஒலி எழுச்சியினால் பண்ய்ய்ண்ற்ன்ள் என்ற உபாதையைத் தோற்றுவிக்கும். காது அழற்சி, இதய அல்லது ரத்த நாள உபாதைகள்,