""ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம்'' என்கிறார் பல்வேறு போட்டிகளில் வென்று பதங்கங்கள் பெற்ற ஸ்ரீவைகுண்டம் ஏழை மாணவர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கோயில்பத்து தெருவைச் சேர்ந்த செல்வம். இவர் செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வேல்இசக்கி, பாலஇசக்கி, முத்து இசக்கி ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில், 11-ஆம் வகுப்பு பயிலும் பாலஇசக்கியும், 10 -ஆம் வகுப்பு பயிலும் முத்து
இசக்கியும், மாரத்தான் மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று பல்வேறு அமைச்சர்களிடமும், 7 மாவட்ட ஆட்சியர்களிடமும் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளனர்.
இவர்களின் விளையாட்டுத் திறமைக்கு பரிசாகக் கிடைக்கும் பணம் காசோலைகளாக கிடைத்தால் அப்பணத்தை எடுத்து செலவிடாமல் அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆகும் பயணச் செலவுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது.
சிறிய வாடகை வீட்டில் அவர்களது குடும்பம் வசித்தாலும் தம்பிகளின் வாழ்க்கைக்காக அண்ணன் வேல்இசக்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்தி தன் தந்தையுடன் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கிறான்.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்வதையே தங்களுடைய லட்சியக் கனவாகக் கொண்டுள்ள பால இசக்கி மற்றும் முத்து இசக்கி ஆகியோருக்கு சத்தான உணவு கூட கிடைப்பதில்லை.
அவர்களுக்கு அரசு உதவி கிடைத்தால் இன்னும் பல வெற்றிகளைப் பெறுவது உறுதி என அம்மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாரத்தான் போட்டியில் பல்வேறு வெற்றிகளை குவித்து வரும் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளி மாணவர் முத்துஇசக்கி கூறியதாவது:
""போதிய வசதி இல்லை என்றாலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளுடன் திரும்புவேன்.
எனக்கு எங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயமுருகன், விவேக் முத்துராஜ் ஆகியோர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் தனிப்பட்ட முறையில் உதவிகளையும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
சத்துணவு சாப்பாடு மட்டுமே நான் உணவாக உட்கொள்கிறேன். எனக்கு உரிய உதவிகள் கிடைத்தால் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு நிச்சயம் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்'' என்றார் அவர்.
முத்து இசக்கியின் தந்தை செல்வம் கூறியதாவது:
""எனது மகன் போட்டிகளில் வெற்றி பெறுவதினால் கிடைக்கும் பணத்தை கொண்டே அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து செல்கிறேன். உரிய உதவி கிடைத்தால் நிச்சயம் எனது மகன் கூடுதலாக வெற்றி பெறுவான்'' என்றார் அவர்.
உடற்பயிற்சி ஆசிரியர் ஜெயமுருகன் கூறியதாவது:
""எங்களது பள்ளி மாணவர் முத்துஇசக்கி மாரத்தான் மட்டுமன்றி ஹாக்கி போட்டியிலும் மாநில அளவில் வெற்றி பெற்ற பன்முகத் திறமை கொண்டவர். இவருக்கு போதிய உதவிகள் கிடைத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெறுவார்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


