டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கீமோ தெரபி... பக்கவிளைவுகள் நீங்க!

எனது வயது 31. திருமணமாகவில்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு எனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதாக (stage III) (Invasive Ductile Carcinoma) கண்டறியப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:42 pm

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 31. திருமணமாகவில்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு எனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதாக (stage III) (Invasive Ductile Carcinoma) கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையினால், இதுவரை மூன்று தடவை  கீமோதெரபி செலுத்தியாகிவிட்டது. இன்னும் மூன்று தடவை கீமோ தெரபி செலுத்த வேண்டும். இதன் காரணத்தால் பின்விளைவாக உபாதைகளை அனுபவித்தாகிவிட்டது.  நாக்கில் ஆங்காங்கே கருப்பாக உள்ளது. எந்தச் சுவை உணர்வுமில்லை. முடி அதிகம் கொட்டி விட்டது.  உள்ளங்கை, கால் விரல்கள் கறுப்பாக மாறிவிட்டன. கை விரல்களின் நகத்தின் அடிபகுதி கறுப்பாகக் காணப்படுகின்றன.  மாதவிடாய் காலத்தில் குறைவான உதிரப்போக்கு.  சிறுநீர் மஞ்சளாகக் காணப்படுகிறது. பசியின்மை.  சிலசமயம் வயிற்றுப்போக்கு. தூக்கமின்மை.  குறையும் வெள்ளை அணுக்கள் ஆகியவை  பக்கவிளைவுகள் ஆகும். கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மீண்டும் உறுப்புகள்  பக்கவிளைவுகளிலிருந்து மீண்டு நன்கு செயல்பட ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உண்டா? சிகிச்சைகள் உண்டா?

- வாசகி, மதுரை.

பல உடல் உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தங்களுக்கு  அங்கம் அங்கமாகப் பிரித்து அப்பகுதிகளுக்கான வலுவிழந்த நிலையை மாற்றுவதே சிறந்தது என்று தோன்றுகிறது. 

வாயில் ஏற்பட்டுள்ள பொத்தல் நிலை, நாக்கில் படர்ந்துள்ள கருமை, சுவை உணர்வு இழந்த நிலை ஆகியவற்றை மாற்ற கருங்காலிக்கட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இச்சிப்பட்டை மற்றும் வேலம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காய்ச்சி, 250 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி, காலையில் 125 மி.லி., மாலையில் 125மி.லி. எனும் கணக்கில், இளஞ்சூடாக வாயினுள் விட்டு, சுமார் 8 - 10 நிமிடங்கள் நிதானமாகக் குலுக்கித் துப்பிவிட, உபாதைகளின் தாக்கம் குறைவதுடன், வாய் அழுக்கற்ற தன்மையுடன் ருசியை நன்கு உணர்வதற்கும் உதவிடும்.

இதைச் செய்து கொள்வதற்குக் கடினமாக இருந்தால், சுத்தமான தேனை சுமார் 20 மி.லி. அளவில் வாயினுள் விட்டுக் கொப்பளித்துத் துப்பலாம். இதனால், வாயில் ஏற்படும் எரிச்சல், தண்ணீர்தாகம் போன்றவை நன்கு குறைந்து விடும். வாயிலுள்ள புண் ஆறுவதற்கும், மருந்துகளின் வீர்யத்தினால் ஏற்படும் வாய் பொத்தலைக் குணப்படுத்தவும் தூய பசு நெய்யையோ, நன்கு காய்ச்சி குளிர்ந்த பாலையோ வாயினுள் விட்டுக் கொப்பளித்துத் துப்புவதும் நல்லதே. 
நீங்கள் தேனைக் காலையிலும், நெய் அல்லது பாலை மாலையிலும் கொப்பளித்துப் பயனடையலாம்.

முடிகொட்டுதலைக் குறைத்து, தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கு வலுவூட்டவும் சிறிய அளவில் சியவனப்பிராசம் எனும் லேகிய மருந்தை சுமார் 5 - 10 கிராம் வரை, சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிட்டு, வாயில் நன்கு கரைந்த பிறகு விழுங்கலாம். இது உங்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாகும். தலையில் நீலிபிருங்காதி எனும் தேங்காய் எண்ணெய்யில் மூலிகைகள் இட்டுக் காய்ச்சிய மருந்தை, பஞ்சில் முக்கி சுமார் 20 - 30 நிமிடங்கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

உள்ளங்கை, கால்விரல்கள், கைவிரல்களின் நகத்தின் அடிப்பகுதி கருப்பு நீங்க, பெண் மருதாணி இலையை மைய அரைத்து, அவ்விடங்களில் பூசி, சுமார் 1 - 2 மணி நேரம் ஊற வைத்துக் கழுவி விட, கருமை மாறி விரல்கள் மற்றும் நகங்களின் வலுவையும் அழகையும் உங்களுக்குக் கூட்டித் தரும்.

கறுப்பு நிற எள்ளை நன்கு பொடித்து, சூடான சாதத்துடன் கலந்து சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து காலை உணவாகச் சாப்பிட, குறைவான உதிரப் போக்கானது நிறைவான அளவில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முடிந்த அளவு, உணவில் உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்ப்பதற்கு முயற்சிக்கவும். கருப்பையை நன்கு வலுப்படுத்தி உதிரச் சிக்கலை மாற்றித் தருபவை இவை.

கல்லீரல் வழியாக இறங்கும் பித்தநீரின் கலப்பால் ஏற்படும் சிறுநீரின் மஞ்சள் தன்மை மாற, மண்பானைத் தண்ணீரில் வெள்ளரிவிதை, கரும்புவேர், வெட்டிவேர், பூசணி மற்றும் சுரைக்காய் விதைகளைச் சிறிய அளவில் போட்டு, பானையின் வாய்ப்பகுதியை மெல்லியதுணியால் கட்டி, மொட்டைமாடியில் இரவில் வைத்து, அதனுள் சந்திரனின் ஒளிக்கதிர்கள் நன்கு விழும்படியான பகுதியில் வைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும், உணவிற்கு முன் சிறிது சிறிதாக சுமார் 100 மி.லி. வரை பருக, கல்லீரலிலிருந்து வெளியாகும் பித்த ஊறல் நன்கு குறைந்து சிறு நீரின் நிறமும் வெள்ளையாகிவிடும்.

முன் குறிப்பிட்ட சியவனபிராசம் லேகியத்தின் தொடர் உபயோகத்தால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசியின்மை மாறிவிடும். நார்த்தங்காய் சாறு பிழிந்து செய்யப்படும் சித்ரான்னம் நல்ல பசி தூண்டியாக இருப்பதால், அதை மதிய உணவில் நீங்கள் சாப்பிடலாம்.

வில்வாதி எனும் குளிகையை நன்கு அரைத்து, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிட்டுவர, வயிற்றுப்போக்கு குறைவதுடன் குடலில் ஏற்படும் விஷ சேர்க்கையும் நன்கு குணமாகும். தூக்கமின்மைக்கு ஜாதிக்காயை அரைத்து இரவு படுக்கைக்குச் சுமார் 2 மணி நேரம் முன் சாப்பிட்டு, சிறிது எருமைப் பால் சாப்பிட, தூக்கம் நன்கு வரும். மதுரையில் நல்ல தரமான எருமைப்பால் கிடைக்கும் தானே?

வெள்ளை அணுக்களின் குறைபாடு நீங்க மாதுளம் பழம், அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, கருப்பு உலர் திராட்சை, பேரீச்சம் பழம், சாரப்பருப்பு, அக்ரோட் போன்றவற்றை சிறிய அளவில், சமச் சீராக சாப்பிட்டு வரவும். கீமோதெரபி முழுவதுமாக முடிய வேண்டும் என்ற அவசியமில்லை. இவற்றை நீங்கள் இப்போதே தொடங்கலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.