சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக் கதிர்

விஜய்சேதுபதி நடிக்கும் "துக்ளக் தர்பார்' படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

ஜி. அசோக்

விஜய்சேதுபதி நடிக்கும் "துக்ளக் தர்பார்' படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே நிறுவனம்தான் விஜய்யின் "மாஸ்டர்' படத்தின் ரிலீஸ் உரிமையையும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொது முடக்கம் முடிந்ததும் இரு படங்களும் திரைக்கு வருகின்றன.

சிம்பு ஜோடியாக "அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதற்கு பிறகு "சத்ரியன்', "இப்படை வெல்லும்', "தேவராட்டம்' போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது "துக்ளக் தர்பார்' படத்தில் விஜய்சேதிபதியின் தங்கையாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

----------------------------------------------

பேய்க் கதையை மையமாக வைத்து ஒரு வெப் தொடரை இயக்க உள்ளார் இயக்குநர் சுராஜ். இதில் கதாநாயகனாக வடிவேலு நடிக்க உள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

"தலை நகரம்' , "மருதமலை' படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை இன்று வரை பேசப்படுவதற்குக் காரணம் சுராஜ்தான்என்கிறது கோலிவுட்.

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகையரிடையே, "பெண்களை ஆதரிக்கும் பெண்கள்' என்ற அர்த்தத்தை வைத்து, கருப்பு - வெள்ளைப் படங்களை, சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதில், ப்ரியா ஆனந்த் தன்னுடைய கருப்பு-வெள்ளைப் படத்தை பதிவிட்டுள்ளார்.

----------------------------------------------

மேயாத மான்' , "பிகில்' போன்ற படங்களில் நடித்துள்ள வேலூர் பெண், நடிகை இந்துஜா. சமீபத்தில், 81 வயதிலும் "தண்டால்' எடுக்கும் பாட்டியின், "வீடியோ'வைப் பகிர்ந்த இந்துஜா, ""எனக்கு வயதாகும்போது, இவரைப் போலவே இருக்க விரும்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

----------------------------------------------

யாரா' என்கிற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். ""இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்ததால், அப்பாவிடம் உதவி கேட்டேன். ஆனால் அம்மாவை, ரோல்மாடலாக வைத்து, அப்படத்தில் நடித்தேன்'' என்றார்.

----------------------------------------------

சினிமாக்கள் ஓடிடி தளத்திற்குச் செல்வது போன்று நாடகங்கள் இணையதளத்திற்கு வருகின்றன. அமெச்சூர் ஆர்டிஸ்ட் சார்பில் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடிக்கும் "காதலிக்க நேரமுண்டு' நாடகம் முதன் முறையாக இணையதளத்திற்கு வருகிறது.

----------------------------------------------

க்பாஸ் புகழ் நடிகை ஷெரின், இந்த அடக்கம் போதுமா? கேட்கும் வகையில், அடக்கமாக தாவணி கட்டி, போட்டோவுக்கு, "போஸ்' கொடுத்துஉள்ளார். அதைப் பார்த்த பலரும், "கல்யாணத்திற்குத் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.