டச் மக்களால் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனக்கென்னவோ டச் மக்கள் 500 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்தபோது அன்று இங்கு இருந்த மக்கள், மெது வடை சாப்பிட்டதைப் பார்த்திருக்க வேண்டும். அதே வடையை டச் மக்கள், ரொட்டியில் உருவாக்கி அதற்கு டோநட் எனப் பெயரிட்டனர். நாம் அன்று எப்படி வடை போட்டோமோ அதேபோன்று தான் இப்பவும் வடை போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர்கள் அப்படிஇருப்பார்களா? அதன் மீது ஒரு பக்கத்தில் சர்க்கரையைத் தூவினர். பாலாடையை ஏற்றினர். ஐஸ்கீரிமை இறக்கினர். பிறகு அவற்றை உலகம் முழுவதும் இன்று அறிமுகப்படுத்தி விட்டனர்.
அமெரிக்காவில் இன்று 15 விதமான டோநட்கள் மிகவும் பிரபலம். கூடுதலாக சாக்லெட் கலவையும் சேர்க்கப்பட்டது, பலன் குழந்தைகளுக்கு பிடித்துப்போக, இன்று உலகில் மிகவும் விரும்பப்படும் டோநட்டாக சாக்லெட் டோநட் உள்ளது.
ஸ்டிராபெர்ரி ஈஸ்ட் டோநட்டுகளும் விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன. உறைபனி நிலையில் பழங்கள், முட்டை, உலர் பழங்கள் என பலவற்றை இணைத்தும் டோநட்கள் ரெடி.
1800-ஆம் ஆண்டு வாக்கிலேயே அமெரிக்காவில் டோநட் இருந்துள்ளது.
இதற்கு ஆதாரம் 1809-இல் வாஷிங்டன் இர்வின் எழுதி வெளியிட்ட THE HISTORY OF NEWYORK என்ற புத்தகம். அதில் டோநட் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நாம் காணும் டோநட்டை 1847-இல் ஹென்சன்கிரகரி என்பவர் உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.
உலக அளவில் டோநட்டை மிகவும் விரும்பி சாப்பிடும் மக்களில் முதல் இடம் கனடா மக்களுக்கு இரண்டாவது இடம் ஜப்பானியர்களுக்கு.
இதுவரை மிக அதிக டோநட்களை சாப்பிட்ட பெருமைக்குரியவர் ஜேம்ஸ் மெக்டோனல்ட்.
இவர் 60 டோநட்டுகளை 1728 விநாடிகளில் சாப்பிட்டு சாதனை செய்தார்.
உலகின் மிக விலை உயர்ந்த டோநட் தங்க இழை ஐசிங் செய்யப்பட்ட டோநட். இது சுமார் 1200 டாலருக்கு 2017-இல் விற்பனை செய்யப்பட்டது. இதன் பெயர் கோல்டன் கிரிஸ்டல்.
பிலிப்பைன்ஸில் 2000 டோநட் கடைகளும், ஜப்பானில் 1500 டோநட் கடைகளும் உள்ளன.
இந்தியாவில் மூன்று டோநட் பிராண்ட்கள் பிரபலமாக உள்ளன.
அவை: மேட் ஓவர் டோநட்ஸ், டன்கின் டோநட்ஸ், க்ரிஸ்பி க்ரீமி ஆகியவை. இதில் மேட் ஓவர் டோநட்ஸ் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 10 வருடங்களுக்கு முன் இந்தியாவில் தன் முதல் கிளையை தொடங்கிய அதற்கு இன்று 55 கிளைகள் உள்ளன. மும்பை, பெங்களூரு, தில்லி, புனே என முக்கிய நகரங்களில் இதன் கிளைகள் உள்ளன. இவற்றில் முட்டை சேர்க்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


