1970 -80களில் , ஹிந்திப் படவுலகின் சூப்பர் ஸ்டார் சஞ்சய்கான், நல்ல அழகு மற்றும் சிறந்த பர்சனாலிட்டி உடையவர். இது அவரைச் சுற்றி பெரிய வட்டத்தை உருவாக்கியிருந்தது.
இன்று சஞ்சய்கானுக்கு வயது 78. இப்பவும் நிஜ சூப்பர் ஸ்டார் போல்தான் இருக்கிறார். அத்துடன் முதல் தடவையாக, தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை “THE BEST MISTAKES OF MY LIFE’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
இதிலிருந்து ஒரு சுவையான சம்பவம்:
1980}இல் இவர் நடித்த "அப்துல்லா' ஹிந்தி படம், துருக்கி மொழியில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதற்காக நேரில் சென்றிருந்தார் சஞ்சய்கான். அப்போது அவருடைய கம்பீரத்தைப் பார்த்து பலர் வியந்தனர். இதில் ஒருவர் பிரபல டான் டின்டார்கிலிக், அவருக்கு சஞ்சய்கானை ரொம்ப பிடித்தது.
அடுத்த நாள் ஊர் திரும்ப இருந்த சஞ்சய்கானை தன் மாளிகைக்கு அழைத்தார்.
மரியாதை நிமித்தம் சென்றார் சஞ்சய்.
அங்கு டான், அவரிடம், ""இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் நேபாளத்துக்கு போதை மருந்து சாம்ராஜ்யத்தின், தலைவராக உங்களை நியமிக்கின்றேன்'' என்றாராம்.
திடுக்கிட்ட சஞ்சய்கான், சமாளித்து ""நான் நேர்மையானவன் நடிகர் மற்றும் கற்பனைவாதி. ஆனால் பிசினஸ் தெரியாது. அதில் நான் சைபர். உங்கள் பணம் முழுவதும் நஷ்டமாகிவிடும்'' எனக் கூற, டான் அதனை நம்பி, சஞ்சய்யை விடுவித்துவிட்டாராம். எப்படி இருக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


