தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சளி நீங்க... கை வைத்தியம்!

வெயில்காலம் வந்துவிட்டாலே மார்பில் உள்ள சளி உருகி செருமிச் செருமி இருமல் தொடங்கி விடுகிறது. இதைச் சட்டென்று போக்க ஆயுர்வேத மருந்துகள் அல்லது ஏதேனும் கை வைத்தியம் பயன்படுமா?

News image
Updated On :1 ஏப்ரல் 2018, 3:17 am

வெயில்காலம் வந்துவிட்டாலே மார்பில் உள்ள சளி உருகி செருமிச் செருமி இருமல் தொடங்கி விடுகிறது. இதைச் சட்டென்று போக்க ஆயுர்வேத மருந்துகள் அல்லது ஏதேனும் கை வைத்தியம் பயன்படுமா?

ங.தனஞ்செழியன், ஏரிக்கரை.

இதற்கு சிறந்த கை வைத்திய முறையாக கோதுமை மாவை தண்ணீர் விட்டுப் பிசைந்து ரொட்டி தட்டி, அந்த ரொட்டியை தோசைக்கல்லிலிட்டு அடுப்பில் சுக்கா ரொட்டியாக வாட்டவும். ஒருபக்கம் வாட்டப்பட்டவுடன் கல்லுடன் இறக்கி, வாட்டப்படாத பக்கத்தில் சிற்றாமணக்கு எண்ணெய்யைத் தடவி அந்தப் பக்கத்தை மார்பில் படும்படி பொறுக்குமளவு சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். மார்பில் கட்டிய கபம் இளகி பெரியவர்களானால் எளிதில் காறி உமிழ்ந்து வெளிக் கொணரலாம். சிறிய குழந்தையானால் செருமிச் செருமி வயிற்றினுள் சென்றுவிடும். இது நல்ல சுகமளிக்கும் ஒரு கை வைத்தியமுறையாகும். கை, கால் மூட்டுகளிலும் மற்ற இடங்களிலும் நீர்கோர்த்தும் வீக்கமும் வலியும் கண்டு நீட்டி மடக்க முடியாதிருக்கும் நிலைகளில் இந்த கோதுமைப் பட்டி மிகவும் நல்ல குணம் தருகிறது. இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இதனை மாற்றிப் புதிதாகக் கட்ட கடும் வலி கூடக் குறைகிறது. சிற்றாமணக்கு எண்ணெய்யுடன் சிறிது வேப்பெண்ணெய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வேப்பெண்ணெய்யைப் பற்றிப் பேசும்பொழுது வேறொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. கிராமங்களில் வேப்பெண்ணெய்யைச் சூடாக்கி மார்பு, கழுத்து, மென்னிப் பகுதிகளில் தடவி சிறிதுநேரம் ஊறிய பிறகு கொள்ளுப் பொடியைச் சூடாக்கி ஒத்தடம் கொடுப்பார்கள். குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும் இதன் மூலம் மார்பில் உள்ள சளி இளகி வெளியே வந்துவிடுவதையும், பார்த்திருக்கிறோம். இவற்றை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய எளிய சிகிச்சைமுறைகளாகும்.

வசந்த பருவகாலம் முடிந்து கடும்கோடை தொடங்கும் காலங்களில் சூடான சூரியனுடைய கதிர்கள் மனிதர்களுடைய மார்புப் பகுதியில் படும்பொழுது சளியானது உருகி இளக்கப்பட்டு பசித்தீயில் விழுந்து அணைத்துவிடக் கூடிய அபாயம் இருப்பதாலும் பலவகையான நோய்களை அது உருவாக்கக் கூடிய சூழ்நிலை இருப்பதாலும் கபத்தை உடனடியாக வெளியேற்ற வாந்தி செய்விப்பதை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். அதற்கு சூடான தண்ணீரில் இந்துப்பைக் கரைத்து நிறையக் குடிப்பதால் வாந்தியாகக் கூடும். அதன் மூலம் கீழ்நோக்கிச் செல்லக் கூடிய கனமான சளியானது வாய்வழியாக வெளியேறிவிடுகிறது. 

மூக்கினுள் விடப்படும் அனுதைலம் எனும் நஸ்யப்ரயோகத்தாலும், தேகபயிற்சியாலும் தலை மற்றும் மார்புப்பகுதியைச் சார்ந்த கபத்தை நம்மால் வெளியேற்றவும், வற்றிவிடச் செய்யவும் முடியும். பூச்சு தேத்தல் அதாவது மார்புப்பகுதியில் கட்டி சூடம், துளசி, வெற்றிலைச்சாறு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்து மார்புப்பகுதியில் பூசி வைத்தல் மூலம் சளியைக் கரைக்கலாம். விராளிமஞ்சள் மீது கடுகு எண்ணெய்யைப் பூசி நெருப்பில் வாட்டி அந்தப் புகையை மூக்கினுள் விடுவதால் சளியினால் ஏற்படும் மண்டைக்குத்து வலி, நீர்க்கோர்வை, ஜலதோஷம் ஆகியவை குறையும். சூடான தண்ணீரை அடிக்கடி வாயினுள் விட்டுக் கொப்பளிப்பதால் கபதோஷத்தினுடைய இருப்பிடமாகிய வாய்ப்பகுதியில் ஏற்படும் கொழகொழப்பு, ருசியின்மை, தொண்டைக் கமறல், நாக்கில் அழுக்கு படிதல் போன்றவை நீங்கிவிடுகின்றன. 

பழைய யவை எனப்படும் வார்கோதுமை, கோதுமை, தேன், சூலத்தில் குத்தி பக்குவம் செய்யப்பட்ட முயல், ஆட்டுமாமிசம், கோழி மாமிசம் போன்றவை சாப்பிட உகந்தவை. மயக்கத்தை ஏற்படுத்தாத மதுபானங்களைப் போன்று தயாரிக்கக் கூடிய கனகாஸவம், தசமூலாரிஷ்டம், வாஸôரிஷ்டம், நிம்பாம்ருதாஸவம் போன்ற மருந்துகள் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட உகந்தவை. மாம்பழச் சாறு பருகுவதற்கு மிகவும் சிறந்தது. சுக்கு நீர், சந்தனம், வேங்கை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கக் கூடிய குடிநீர், தேன் கலந்த தண்ணீர், வெட்டிவேர் தண்ணீர் போன்றவற்றில் ஒன்றைப் பருகலாம். 

ஆயுர்வேத மருந்துகளில் வ்யாக்ரியாதி கஷாயம், தசமூலகடுத்ரயாதி கஷாயம், இந்துகாந்தம் கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம் கஷாயம், அக்னிகுமார ரஸம், வ்யோஷாதி வடகம், ஹரித்ரா கண்டம், ஆஷால்யாதி குடிகா, த்ரிபுவனகீர்த்தி ரஸம், புக்தம்ஜரீ குடிகா போன்ற தரமான மருந்துகள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி வெந்நீருடனோ தேனுடனோ கஷாயத்துடனோ சேர்த்துச் சாப்பிடக் கூடிய மருந்துகள். 

குளிர்ந்த நீரில் குளிப்பது, ஐஸ் க்ரீம் சாப்பிடுவது, குளிரூட்டப்பட்ட அறையில் படுப்பது, தும்பையும் தூசியும் நிறைந்த அறையில் அமர்ந்திருப்பது, பழைய புத்தகங்கள் நிறைந்த அறையில் சென்று புத்தகங்களை எடுத்துப் பார்ப்பது, தூசியும், புகையும் நிறைந்த சாலைகளில் மூக்கை மூடாதபடி பயணம் செய்வது, உணவில் அதிக அளவில் இனிப்பும், புளிப்பும், உப்பும் சேர்த்துச் சாப்பிடுவது, கடல்வாழ் பிராணிகளாகிய மீன், நண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.