லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சர்தார் வேதரத்தினத்தின் குணாதிசயங்கள்

சர்தார் வேதரத்தினம் பிள்ளை தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் விடுதலைக்காக

News image
Updated On :8 பிப்ரவரி 2015, 3:47 am

சர்தார் வேதரத்தினம் பிள்ளை தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் விடுதலைக்காக 1930, 1931-32, 1937, 1940- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனைச் சத்தியாக்கிரகப் போராட்டங்களிலும் பங்கேற்று பல முறை சிறை புகுந்தவர், இவர். மூன்று தடவை அவர் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக வென்று, 14 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார்.

இவருக்கிருந்த சில பழக்க வழக்கங்கள்:

இவருக்கு மிக அபூர்வமாகவே கோபம் வரும், அப்போதும் கூட வார்த்தைகளை வீணாக்கமாட்டார். தன்னைக் கோபப்பட வைத்தவரை பார்த்து "பிரகஸ்பதி' என்பார் அதட்டலாக; அதோடு அந்தக் கோபம் சரி.

என்ன குளிரானாலும் சரி; சட்டை போட்டுக் கொள்ளாத காந்தியவாதியாகவே இவர் கடைசி வரை வாழ்ந்தார்.

பச்சைத் தண்ணீரில் நீண்ட நேரம் குளிப்பது இவருக்குப் பிடிக்கும். ஊரில் இருக்கும் போதெல்லாம் கோடியக்கரைக்கு அதிகாலையிலேயே சென்று, கடலில் நெடுநேரம் நீந்திகளிப்பார்.

தமது துணிகளைத் தாமே துவைத்துப் பிழிந்து உலரவைத்து விட்டுத்தான் இவர் நீர்நிலையிலேயே இறங்குவார்.

ஓட்டப்பந்தயம், கால்பந்தாட்டம்  மிகவும் பிடிக்கும். எத்தனை மைலானாலும் சரி, அலுக்காமல் நடந்துபோகவே விரும்புவார்.

 காபி, டீ, சோடா எதுவும் குடிக்க மாட்டார். அதே போல் பொடி போடுவதும், புகை பிடிப்பதும் கூட பிடிக்காது.

 எப்போதும் தவறாமல் நாட்குறிப்பு எழுதுவார்.

திங்கட் கிழமை தோறும்

மௌனவிரதமிருப்பார்.

இப்படி சர்தார் வேதரத்தினத்தினுடைய முக்கிய குணாதிசயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

("தெரிந்தவர்கள் தெரியாதவைகள்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.