டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்களை ஆட்டலாமா?

பெண்களுக்கு மாதவிடாயைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சீரான இடைவெளியில் ஏற்படுத்தும் அபானன் என்ற வாயு, உங்களுக்குச் சீற்றமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:59 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 50. மாதவிடாய் நின்று ஒரு வருடமாகிறது. அதிலிருந்து இரண்டு கால்களிலும் பின் தொடையில் உள்ள சதைப் பகுதி பயங்கரமாக வலிக்கிறது. குளிர்காலத்தில் தொடையின் பின் பகுதியில் நரம்பு பிடித்து இழுத்து கொள்கிறது. காலணியைக் கழற்றிவிட்டுத் தரையில் நின்றால் பழைய நிலைக்கு வர சுமார் அரை மணி நேரம் ஆகிறது. பஸ்ஸில் 2 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருந்தால் இரண்டு கால்களோடு இடுப்பும் கடுக்கிறது. இந்த உபாதையைக் குணப்படுத்துவது எப்படி?

பி.பிரியா, காரைக்குடி.

பெண்களுக்கு மாதவிடாயைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சீரான இடைவெளியில் ஏற்படுத்தும் அபானன் என்ற வாயு, உங்களுக்குச் சீற்றமடைந்திருப்பதாகத் தெரிகிறது. சிறுகுடல், பெருங்குடல் பகுதிகள் இயற்கையாகவே தளர்ந்த தொந்தியினுள்ளே அமைக்கப்பட்டிருப்பதன் காரணமே, அவற்றினுள் சஞ்சரிக்கும் வாயுவின் அழுத்தம் வெளியில் எதிரொலித்து உணரப்படாமலிருக்கத்தான். குடலில் அதிக நேரம் உணவின் குழைவம்சம் தங்குவதால், அதனூடே செல்லும் வாயு தடைபடாமலிருக்க, இஷ்டப்படி விரிந்து சுருங்க இடவசதி தேவை. விரிந்து சுருங்க கருப்பைக்கு அவசியம் இல்லாமற் போனதால், வாயுவின் சஞ்சாரத்தில் தடை ஏற்பட்டு, அது செல்ல வேண்டிய பாதையில் செல்ல முடியாமல், இடுப்பின் வழியே பின் தொடை நரம்புகளின் வழியாக இடம் பெயர்ந்து செல்வதால், தொடையின் பின்புறச் சதைப் பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

நரம்புகளில் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் இந்த வாயுவின் சீற்றத்தை, இடுப்பின் கீழ் பகுதி வழியாக தொடைகளிலும், கெண்டைச் சதை மற்றும் குதிகால்,பாதம் வரை மூலிகைத் தைலங்களாகிய தான் வந்திரம், சஹசராதி, நாராயணம், முரிவெண்ணா போன்றவற்றில் ஒன்றிரண்டை வெதுவெதுப்பாக இரும்புக் கரண்டியில் சூடாக்கி, தடவிவிட்டு, ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, புங்கை, யூகலிப்டஸ் ஆகியவற்றின் இலைகளை நறுக்கி துணியால் மூட்டைகட்டி, சூடாக்கி, எண்ணெய் தடவிய பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால், வாயு அடங்கி ஒடுங்கும். ஆசன வாய் வழியாகச் செலுத்தப்படும் எண்ணெய் வஸ்தி (எனிமா), கஷாய வஸ்தி போன்ற சிறந்த சிகிச்சை முறைகளால், குடலில் ஏற்பட்டுள்ள வாயுவின் அதிகமான கோபத்தை வெளியேற்றி, உங்களுக்கு ஏற்பட்டுள்ள நரம்பு வலிப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். இந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி மருத்துவரின் நேரடிப் பார்வையில் செய்து கொள்வதே நல்லது.

உள்ளுக்குச் சாப்பிட, தான்வந்திரம், தசமூலம், விதார்யாதி, சுகுமாரம், இந்துகாந்தம் போன்ற கஷாய மருந்துகளும், க்ஷீரபலா 101, தான் வந்திரம் 101, பலா தைலம் போன்ற மூலிகை நெய் - தைல மருந்துகளும் தரமானவை. மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்.

வாயுவைத் தூண்டிவிடும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை மிதமாகச் சேர்க்கலாம். கறிகாய்களில் உருளைக் கிழங்கு, வாழைக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை, வேர்க்கடலை, சூடு ஆறிய பருப்பு சாம்பார், கொண்டைக் கடலை சுண்டல், கொத்தவரங்காய் தவிர்க்கவும். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும். ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டு அமர்வதைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பதே நல்லது. பேசும்போதோ, வெறுமனே அமர்ந்திருக்கும்போதோ கால்களை ஆட்டிக் கொண்டேயிருக்க வேண்டாம்.

இப்படி மருந்தையும் உணவையும் செய்கையையும் சரியானவிதத்தில் அமைத்தால், தொடையில் ஏற்பட்டுள்ள நரம்பு வலியைக் குணப்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.