சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்

எட்டாண்டுகளுக்குப் பின் விஜய் - ஆர்.பி.சௌத்ரி கூட்டணி இணைகிறது. 25-ஆவது ஆண்டில் 85-ஆவது படத்தை விஜய்க்காக தயாரிக்க வருகிறது

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:50 am

ஜி. அசோக்

எட்டாண்டுகளுக்குப் பின் விஜய் - ஆர்.பி.சௌத்ரி கூட்டணி இணைகிறது. 25-ஆவது ஆண்டில் 85-ஆவது படத்தை விஜய்க்காக தயாரிக்க வருகிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். "பூவே உனக்காக', "லவ்டுடே', "ஷாஜஹான்', "துள்ளாத மனமும் துள்ளும்', "திருப்பாச்சி' படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு "ஜில்லா' என பெயரிடப்பட்டுள்ளது. "அரண்' படத்துக்குப் பின் இதில் முக்கியப் பாத்திரமேற்று நடிக்கிறார் மோகன்லால். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தம்பிராமையா, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், சூரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். மதுரை மாவட்ட பின்னணியில் உருவாகும் இப்படத்தை, "முருகா' படத்தை இயக்கிய நேசன் எழுதி இயக்குகிறார். நட்ராஜ் ஒளிப்பதிவில், டி.இமான் இசையமைக்கிறார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதை ஒதுக்கி வைக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவே நம் முன் வந்து நிற்கும் என்பதைக் கருவாக கொண்டு திகில், ஆக்ஷன் கலந்து உருவாகும் படம் "மாசாணி'. கே. பத்மராஜா - எல்.ஜி.ஆர். இயக்கும் இப்படத்தை எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார். அகில் கதாநாயகனாக நடிக்கிறார். இனியா, சிஜாரோஸ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். "வாகை சூட வா', "அம்மாவின் கைப்பேசி' படங்களில் எதார்த்தமான பெண்ணாக பார்த்த இனியா, முதல் முறையாகத் திகில் படத்தில் நடிக்கிறார். ""இதுவரை தமிழ் சினிமாவில் எனக்கிருந்த இமேஜை இந்தப் படம் மாற்றி காட்டும். தூக்கியடிக்கும் புயல் காற்று, நடுங்க வைக்கும் இரவு காட்சிகள், மழை, மின்னல் என புதிய அனுபவம் கிடைத்தது. இதில் நடிக்க கேட்ட போது மலையாள சினிமாவில் பிஸியாக இருந்தேன். என்னைச் சுற்றியே கதை நடப்பதாக இருந்ததால் ஏற்றுக் கொண்டேன்'' என்றார் இனியா.

"யாவரும் நலம்' மூலம் தமிழில் அறிமுகமான நீது சந்திரா, அஜித் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். "ஆதிபகவன்' படத்துக்குப் பின் கோலிவுட் பட வாய்ப்புகளுக்காக சென்னையில் காத்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜித்துடன் "மங்காத்தா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, ஏற்க முடியவில்லையாம். "ஆதிபகவன்' படத்தின் கதாபாத்திரத்தில் ஒன்றி நடிக்க வேண்டி இருந்ததால், அஜித் பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் அஜித் படத்தில் நடிக்கும் ஆசையை வெளியிட்டு இருக்கிறார். ""தமிழ் ரசிகர்கள் மிகுந்த நேசத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். தன்னை மகிழ்ச்சிப்படுத்தும் ஸ்டார்களை அவர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் எனக்கு கிடைத்தது. தமிழ் ரசிகர்களை நானும் நேசிக்கிறேன். இந்த எண்ணம் தவறானது அல்ல. அஜித்துடன் நடிக்க காத்திருக்கிறேன். அஜித் இந்திய சினிமா ஹீரோக்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்'' என்றார் நீது சந்திரா. 

"தமிழ்ப்படம்' இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து இயக்கும் படம் "ரெண்டாவது படம். விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடிக்கின்றனர். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு. கண்ணன் இசையமைக்கிறார். தமிழ்ப் படத்தில் காமெடியாக சில சில படங்களை கிண்டல் அடித்து திரைக்கதை அமைந்திருந்தது. ரெண்டாவது படமும் அதே பாணியா...? இயக்குநரிடம் பேசும் போது, ""தமிழ்ப் படம்' ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். அந்தப் படத்தில் சில படங்களையும், சில ஸ்டார் நடிகர்களையும் கிண்டலடித்து இருந்தேன். அந்த பாதிப்பு இன்னும் சில ஸ்டார் நடிகர்களிடம் இருக்கிறது. என்னைப் பார்க்கும் போதெல்லாம் ""என் மேல் என்ன கோபம்'' என கேட்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அது செல்ல கோபம்தான். ஆனால் "ரெண்டாவது படம்' முற்றிலும் மாறுபட்டது. காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கும். களம், காட்சிகள் இரண்டையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.

அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் மணிரத்னம். 6 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்கானை வைத்து "லஜ்ஜா' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார் மணிரத்னம். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையாக இது அமைந்திருந்தது. பாலிவுட் எழுத்தாளர் அனுராக் கஷ்யப்வுடன் இணைந்து இக்கதையை சினிமாவுக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடிவு செய்தார். உருது எழுத்தாளர் இஸ்மத் சுஹ்தயின் பிரபல கதையை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டது. கதை உரிமை பிரச்னை  குறுக்கிட்டது. படம் தாமதமானதால் அமிர்கான் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். இதையடுத்து இந்தப் பட தயாரிப்பு நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மும்பை சென்ற மணிரத்னம் மீண்டும் இப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டார். பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இந்த ஸ்கிரிப்டை அவர் எழுதி வருகிறார்.

புதுமுகம் லக்ஷ்மண், கார்த்திகா, சுபிக்ஷா, மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "அன்னக்கொடியும் கொடி வீரனும்'. பாரதிராஜா இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதன் தலைப்பில் "கொடி கொடி' என மீண்டும் இரண்டு இடங்களில் வருவதால், பெயர் குழப்பம் வருவதாக கூறப்பட்டு வந்தது.  இதையடுத்து தலைப்பை மாற்ற பாரதிராஜா முடிவு செய்தார். தன் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் இது குறித்து பாரதிராஜா பேசினார். ""புதிதாக ஒரு பெயரை வைப்பதுடன், இருக்கும் பெயரை சுருக்கினால் நன்றாக இருக்கும்'' என சிலர் யோசனை சொல்ல, அதன்படி "கொடி வீரனை' தூக்கிவிட்டு, "அன்னக்கொடி'

எனப் பெயரை மாற்றி வைத்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மே மாத இறுதியில் படம் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.