சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக் கதிர்

பூனம் பஜ்வா, "தாமிரபரணி' பானு, ரியாஸ்கான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் "மாந்திரீகன்'.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:45 am

ஜி. அசோக்

பூனம் பஜ்வா, "தாமிரபரணி' பானு, ரியாஸ்கான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் "மாந்திரீகன்'. அதே பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது. ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்துக்கு வைத்தி எஸ்.பிள்ளை ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பாலாஜி கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஆர்.பி.பாலா வசனத்தில் மலையாளப் படவுலகின் பிரபல இயக்குநர் அனில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அனில் கூறுகையில், ""சமஸ்தானத்தைச் சேர்ந்த இளைஞன், ஓர் ஏழைப் பெண்ணை காதலிக்கிறான். இதை எதிர்க்கும் அவரது சகோதரர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்து விடுகின்றனர். காதலன் தற்கொலை செய்து கொள்ள, இறந்த அப்பெண் ஆவியாக வந்து பழி வாங்குவதுதான் கதை. சஸ்பென்ஸ் அதிகம் உள்ள திகில் கதையான இப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் படத்தை உருவாக்கும் போதே, தமிழில் வெளியிடும் திட்டத்தில் இருந்தோம். அதன்படி படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார் இயக்குநர் அனில்.
 
 ஸ்ரேயாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ரூபா அய்யர். ""தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்தியாவின் கடைசி இளவரசன், இளவரசியின் கதையாக "சந்தரா' ஸ்கிரிப்ட் உருவானது. இதில் இளவரசியாக நடிக்க பல ஹீரோயின்களை சந்தித்தேன். யாரும் பொருத்தமாக அமையவில்லை. சில நடிகைகள் கதையில், கேரக்டரில் மாற்றம் வேண்டும் எனக் கேட்டார்கள். மாற்றங்கள் செய்யக்கூடிய கதையாக இதை நான் உருவாக்கவில்லை. இறுதியில் ஸ்ரேயாவை பார்த்த போது, அவரது உடலமைப்பு, தோற்றம் இளவரசியாக நடிக்க பொருத்தமாக இருந்தார். அதனால் அவர்தான் இளவரசி என்பதை முடிவு செய்து விட்டேன். கதையை சொன்னதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு, தன்னை வருத்திக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருக்கும் ஸ்ரேயாவுக்கு இப்போதும் பல படங்கள் காத்திருக்கின்றன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக எந்தப் படத்துக்கும் கால்ஷீட் ஒதுக்கவில்லை. ஸ்ரேயாவின் சினிமா ஆர்வம் மகத்தானது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் ரூபா அய்யர்.
 
 "பார்யா அதரா போரா' படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவுக்கு வருகிறார் கோபிகா. ஆஸ்திரேலிய தொழில் அதிபர் அஜ்லெûஸ மணந்து நாடு கடந்தவருக்கு, மலையாள தயாரிப்பாளர் ஜோசப் சினிமா அழைப்பு விடுக்க, ""கதை நல்லா இருக்கு. நானே நடிக்கிறேன்'' என கேரளத்திலேயே தங்கி விட்டார். விடுமுறைக்காக தன் மகனுடன் தாய் வீடு வந்தவரை சந்தித்தார் ஜோசப். ""நடிக்கலாம் என நினைக்கிறேன்'' என கோபிகா அஜ்லெஸþக்கு எஸ்.எம்.எஸ்.தட்ட, ""பிடிச்சிருந்தா நடி''யென அஜ்லெஸþம் பச்சைக் கொடி காட்டி விட்டார். கோபிகாவுக்கு ஹீரோ ஜெயராம். ""நான் கேரளத்துக்கு வந்ததை தெரிந்து பலரும் என்னிடம் பேசினார்கள். ஆனால் ஜோசப் சொன்ன கதை பிடித்திருந்தது. அதனால்தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. திருச்சூர் அருகிலேயே ஷூட்டிங். அதனால் குழந்தையை கவனித்துக் கொள்ளவும் நேரம் இருக்கிறது. துணிச்சலான பெண் வேடம். இது மாதிரி இதற்கு முன்பு நடித்ததில்லை. நேரமும், கேரக்டரும் பொருந்தி வந்தால் தொடர்ந்து நடிப்பதை பற்றி யோசிப்பேன்'' என்றார் கோபிகா.
 
 "தேநீர் விடுதி' படத்துக்குப் பின் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் படம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே'. அபி, காயத்ரி, தீட்சிதா, அபிராமி ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கு.ஞானசம்பந்தன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்.எஸ்.குமரன் பேசுகையில், ""தேநீர் விடுதி' படத்தின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. நல்ல விஷயங்கள் ஒன்று கூடி வரும் போதுதான் வெற்றி சொந்தமாகும். அதற்கான திட்டமிடலோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு லட்சியம். தன்னால் அடைய முடியாத ஒரு விஷயத்தை தன் மகனை வைத்து அடைந்து விடுவது என்பதுதான் அது. அந்த விஷயம்தான் இந்தப் படத்தின் கதை ஏரியா. முழுக்க முழுக்க கேரளப் பின்னணியில் வரும் தமிழ்ப் படமாக இது இருக்கும். திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா உள்ளிட்ட கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. வைரமுத்துவின் பாடல்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன'' என்றார்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.