திரைக்கதிர்
தெலுங்கு நடிகர் ராணா - த்ரிஷா நட்பு, காதலாகி விரைவில் திருமணத்தில் முடியலாம் என்கிறது அவர்களுக்கு நெருங்கிய வட்டாரம். த்ரிஷா தரப்பில் எப்போதோ ஓ.கே. ஆகிவிட்டது. ஆனால் ராணா குடும்பத்தார்தான் யோசனையில் உ


தெலுங்கு நடிகர் ராணா - த்ரிஷா நட்பு, காதலாகி விரைவில் திருமணத்தில் முடியலாம் என்கிறது அவர்களுக்கு நெருங்கிய வட்டாரம். த்ரிஷா தரப்பில் எப்போதோ ஓ.கே. ஆகிவிட்டது. ஆனால் ராணா குடும்பத்தார்தான் யோசனையில் உள்ளனர். இருக்காதா பின்னே...
இந்தியத் திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் ஃபால்கே விருது பெற்ற டி.ராமாநாயுடுவின் பேரனும் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோரின் மருமகனுமான ராணா குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4500 கோடி என்றால்... யோசனை பலமாகத்தானே இருக்கும்.
தனது படங்களில் புரட்சிகரமான கருத்துகளை முன் வைத்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள கன்னடத்தின் முன்னணி நடிகர் உபேந்திரா விரைவில் அரசியலில் குதிக்கிறார். படங்களில் மட்டுமே நல்ல கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது அரசியலில் நுழைந்து கர்நாடகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் சமூக தளத்தில் சூர்யாவின் நடவடிக்கைகள் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதை அறிந்த சூர்யா, இதுவரை என் பெயரில் இயங்கிவரும் "ஃபேஸ்புக்ட எதுவுமே என்னுடையது இல்லை. எல்லாமே போலியானது. "ஃபேஸ்புக்' செயல்பாடுகளில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், அதில் முழு நேரமும் இயங்க முடியாது என்பதால், வேறொரு பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து வெறுமனே ஒரு பார்வையாளராக மட்டுமே இயங்கிவருகிறேன். தயவு செய்து என் பெயரில் உள்ள கணக்கு வழக்குகளை இத்தோடு முடித்துக்கொண்டு என்னை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் விரைவில் சைபர் கிரைமில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். "பாஸ்... நீங்களே வேறொருத்தர் பேருல அக்கவுண்ட் வச்சிருக்கேன்னு இவ்வளவு ஓப்பனா சொல்றப்ப, அவனுங்க உங்க பேருல அக்கவுண்ட் வச்சிருக்கது மட்டும் எப்படி தப்பாகும்? என்று உடனே அதற்கு ஃபேஸ்புக்கில் பல கமெண்ட்டுகள் வர "கப் சிப்' ஆகியிருக்கிறார் மாற்றான்.
"சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கிரிஷ்குமாருடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன். ஏற்கெனவே முறையான நடனப் பயிற்சி பெற்றிருந்தாலும் இந்தப் படத்துக்காக பிரபுதேவாவிடம் தீவிரமாக நடனம் கற்று வருகிறார். பிரபுதேவாவுடனான நடனப் பயிற்சி, மனதுக்கு நிறைவாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி.
"துப்பாக்கி' படத்தைத் தொடங்கியதிலிருந்தே காஜல் அகர்வாலின் கால்ஷீட் பிரச்னை, டைட்டில் தொடர்பாக "கள்ளத்துப்பாக்கி' படக்குழுவினரின் வழக்கு, கதையில் மாற்றம் செய்ய முடியாத சூழ்நிலை என குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய். இதற்கெல்லாம் தலைப்புதான் காரணம் என யாரோ கூற, தலைப்பை மாற்றிவிடலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இயக்குநர் முருகதாúஸô ""இந்தத் தலைப்புதான் படத்துக்கே பலம்; அதை மாற்றக் கூடாது'' என கூறிவிட்டாராம்.
தனது யூனிட்டில் உள்ளவர்கள் படப்பிடிப்பின்போது நடிகைகள், துணை நடிகைகளிடம் தவறான எண்ணத்துடன் பேசினாலே அவர்களைத் துரத்தி விடும் பழக்கமுடையவர் இயக்குநர் பாலா. அதனால் எதற்கு வீண் சச்சரவு என்று - படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் கதாநாயகி வேதிகாவுடன் பேசுவதை மட்டுமல்லாமல், அவரைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தவாறே நடித்துக் கொடுத்திருக்கிறார் நாயகன் அதர்வா.
தனது கணவர் ராஜகுமாரன் இயக்கும் "திருமதி தமிழ்' படத்தில் கதநாயகியாக நடிக்கிறார் தேவயானி. இதில் அவருக்கு இரண்டு டூயட் பாடல்கள். ஒரு பாடலில் பதினாறு வயதுப் பெண்ணாக நடித்துள்ளார். இந்தத் தோற்றத்துக்காக அழகுக் கலை நிபுணர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் பயிற்சி பெற்று அதன் பிறகே பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.
சல்மான்கான் நடித்த "தபாங்' ரூ.147 கோடி, "ரெடி' ரூ.122 கோடி, "பாடிகார்டு' ரூ.148 கோடி என வரிசையாக அவருடைய படங்கள் வசூலில் சாதனை செய்தன. கேத்ரினா கைஃபுடன் சல்மான் நடித்து அண்மையில் வெளியான "ஏக் தா டைகர்' படம் முதல் ஐந்து நாள்களிலேயே ரூ.100 கோடி வசூலித்துள்ளது. அமீர்கானின் "3 இடியட்ஸ்' படத்தின் வசூலான ரூ.200 கோடியை இந்தப் படம் தாண்டிவிடும் என்கிறது பாலிவுட் வட்டாரம். இதையடுத்து சல்மான் - கேத்ரினா கைஃப் கூட்டணியில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி. இதற்காக சல்மான்கான் ரூ.100 கோடி சம்பளம் கேட்டாலும் தரத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...