டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு சிறுவயதிலிருந்தே மிகப் பெரிய உடற்குறைபாடு ஒன்று இருந்து வருகிறது. சிறுநீர்த் துவாரத்திலிருந்து சிறுநீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. காற்சட்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:11 pm

எஸ். சுவாமிநாதன்

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு சிறுவயதிலிருந்தே மிகப் பெரிய உடற்குறைபாடு ஒன்று இருந்து வருகிறது. சிறுநீர்த் துவாரத்திலிருந்து சிறுநீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. காற்சட்டையின் தொடையிடுக்குப் பகுதியில் சிறுநீர் ஊறி துர்நாற்றம் அடிக்கிறது. அறுவைச் சிகிச்சை செய்தும் பிரச்னை தீரவில்லை. ஆயுர்வேத முறையில் இக்குறைபாட்டுக்குத் தீர்வு உள்ளதா?

என்.அருள்ஜோதியன், புதுச்சேரி.

"மூத்ரஸங்க்ரஹணீயம்' அதாவது சிறுநீரை கட்டுப்படுத்தும் நாவல் கொட்டை, நாவல் பட்டை, மாங்கொட்டை, மாமரப் பட்டை, பூவரசு, ஆலமரம், இத்தி,அத்தி, அரசமரப்பட்டை, சேரான்கொட்டை (சுத்தி), கல்லூர் வஞ்சி / கல்லுருக்கி, வெள்ளைக் கருங்காலி ஆகிய பத்து மூலிகைப் பொருட்கள் சிறந்தவை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இதில் சில மூலிகைப் பொருட்களை அந்த மாணவன் தினம்தோறும் பயன்படுத்திக் குணமடைய முயற்சி செய்யலாம். நாவல் கொட்டையைத் தூள் செய்து டீ டிகாக்ஷன் போடுவது போல, வெந்நீர் விட்டு கொதிக்கவிட்டு, வடிகட்டி, காலை, மாலை கால் கிளாஸ் குடிக்கலாம். முற்றிய மாங்கொட்டையினுள் உள்ள மாம்பருப்பை உலர்த்தி வைத்துக் கொண்டு அத்துடன் கருவேப்பிலையும் சிறிது மிளகும் சேர்த்துஅரைத்து மோரில் கரைத்துச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்புச் சேர்த்துக் கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மாந்தளிரையும் மாம்பருப்பின் இடத்தில் உபயோகிக்கலாம். இது வயிற்றோட்டத்தையும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கசிவையும் குறைக்கும்.

கருங்காலி மரத்துண்டைப் பெருந்தூளாக்கி நீரில் நன்றாக வேகவைத்துக் கஷாயமானதும் வடிகட்டி இளந்தீயில் சுண்டவைத்துக் குழம்பானதும் வெயிலிலிட்டுக் காய வைத்து எடுத்துக் கொள்வதற்குக் "காய்ச்சுக் கட்டி' என்று பெயர். துவர்ப்பு மிக்க இதை ஒரு சிட்டிகை காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரலாம்.

அரச மரப்பட்டையை இடித்துப் பொடியாக்கிக் கருக்கிய சாம்பலை நீரில் கலக்கித் தெளிய வைத்து எடுத்த நீரை இரவில் படுக்கும் முன் சிறிது குடித்து வரலாம். சிறுநீர் சொட்டுதல் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலும் உமட்டல், வாந்தி, விக்கல் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

கசப்பும் - துவர்ப்பும் கொண்ட உணவு வகைகள், மருந்துகள் நீர் சொட்டுதலைச் சுண்டச் செய்பவை. அந்த வகையில் கொம்பு பாகற்காயை வறுவலுக்கு நறுக்குவதுபோல நறுக்கி வெயிலில் உலர்த்திப் பொடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் 2 சிட்டிகை முதல் 1 டீ ஸ்பூன் அளவு வரையில் தினம் 2 வேளை சாப்பிடுவது நலம். துவர்ப்புச் சுவை நிறைந்த கடுக்காயை ஒரு மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா எனும் சூரண மருந்தை, இரவில் படுக்கும் முன் அரை டீ ஸ்பூன் (2 1/2 கிராம்) அளவில் எடுத்து, 1 ஸ்பூன் (5 மி.லி) தேன் விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடுவதும் நல்லதே.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சந்தனாஸவம் எனும் மருந்தை சுமார் 25 - 30 மிலி அளவில் காலை இரவு தொடர்ந்து 48 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

"கோமூத்ரசிலாஜது' என்று ஒரு மருந்து இருக்கிறது. பொடி மருந்தாகவும், கேப்ஸýலாகவும் கிடைக்கும். ஒரு சிட்டிகை அல்லது ஒரு கேப்ஸýல் மேற்குறிப்பிட்ட சந்தனாஸவத்துடன் சாப்பிடுவதும் நல்லதே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.