நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்

'துப்பாக்கி' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் படத்தின் நாயகன் விஜய். இதில் விஜய்யுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதற்காக மும்பை சென்றவர்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:27 pm

மனோஜ் கிருஷ்ணா

'துப்பாக்கி' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் படத்தின் நாயகன் விஜய். இதில் விஜய்யுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதற்காக மும்பை சென்றவர் பாடலைப் பாடிவிட்டு, கெüதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள "யோஹன்' படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

நடிகர், பைக் ரேஸ் வீரர், கார் ரேஸ் வீரர் போன்றவற்றோடு இன்னொரு பெருமையும் அஜித்துக்கு உண்டு. அது... விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் வைத்துள்ள இந்திய நடிகர் அஜித் மட்டுமே.

பிரபுதேவா இயக்கிய முதல் படம் "நூஒஸ்தானன்டே நேன்ஒத்தன்டேனா'. தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த இந்தப் படம் "சம்திங் சம்திங்' என்ற பெயரில் தமிழிலும் வெற்றி பெற்றது. இப்போது இதே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். தமிழிலும் தெலுங்கிலும் கதாநாயகியாக நடித்த த்ரிஷா, ஹிந்தி வாய்ப்பும் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக்கி படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் பிரபுதேவா. அவர் இயக்கிய அனைத்து ஹிந்திப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் தெலுங்கின் முன்னணி நாயகன் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு பிரபுதேவா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

"கோ' படம் வெளிவருவதற்கு முன்பு கார்த்திகா "மகரமஞ்சு' என்ற மலையாளப் படத்தில் ஒப்பந்தமானார். ஓவியர் ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் கதாநாயகனாக நடித்துள்ளார். லெனின் ராஜேந்திரன் இயக்க - கார்த்திகா, நித்யாமேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். "படத்தில் மிகவும் நெருக்கமான காதல் காட்சிகள் உண்டு. சர்வதேசப் பட விழாக்களில் மட்டுமே திரையிடுவோம்' என படக்குழுவினர் கூறியதால் கார்த்திகாவை சற்று கிளாமராக நடிக்க அனுமதித்தார் அம்மா ராதா. இரண்டு ஆண்டுகளில் கார்த்திகா, நித்யாமேனன் ஆகியோரின் மார்க்கெட் ஓரளவு உயர்ந்து, அறிந்த பிரபலங்களாகிவிட்டதால் படத்தில் இடம்பெற்றுள்ள நெருக்கமான காட்சிகளை விளம்பரப்படுத்தி படத்தை தெலுங்கில் "டப்' செய்யவுள்ளனர். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறது ராதா வட்டாரம்.

மோட்டார் பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்ட தனுஷ், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக்கை வைத்திருக்கிறார். ஹெல்மெட் அணிந்தவாறு சென்னை வீதிகளில் இந்த பைக்குடன் வலம் வருவதுதான் அவருடைய லேட்டஸ்ட் ஹாபி.

பாண்டியராஜனின் சூப்பர் ஹிட் "ஆண் பாவம்' படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்துடன் படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதில் பாண்டியராஜன் வேடத்தில் தானும் பாண்டியன் வேடத்தில் சந்தானமும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி தனது ஆஸ்தான இயக்குநர் ராஜேஷ் உள்பட சில இயக்குநர்களிடம் "ஸ்கிரிப்ட்'டை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான புனீத் ராஜ்குமார் "நா கண்ட அப்பாஜி' (என் பார்வையில் என் தந்தை) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸிவினி, எழுத்தாளர் ப்ரகிருதி பனாவாசி ஆகியோர் புத்தக உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர். கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள இந்தப் புத்தக விற்பனை மூலம் ஒரே மாதத்தில் ரூ.40 லட்சம் கிடைத்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நாயகி ப்ரியங்கா சோப்ராவின் பெயரை ட இ என பச்சை குத்திக்கொண்ட ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படிப்பட்ட ப்ரியங்கா சோப்ரா, தன் தந்தை அசோக் சோப்ரா மீது அலாதி பிரியம் கொண்டவர். புற்று நோயால் அவதிப்பட்டு வரும் தந்தைக்காக தினமும் தீவிரமாகப் பிராத்தனை செய்து வரும் ப்ரியங்கா, "அப்பாவின் செல்லக்குழந்தை" என்பதைக் குறிக்கும் விதத்தில் தன்னுடைய கையில் ஈஹக்க்ஹ்'ள் ப்ண்ப் ஞ்ண்ழ்ப் என டாட்டூ குத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி' படம், குழந்தைகளைக் கவரும் விதத்தில் சில மாற்றங்களுடன் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்கியும் சில புதிய காட்சிகளை சேர்த்தும் உருவாக்கப்பட்டுள்ள இந்த 3டி படத்துக்கு ரூ.9 கோடி வரை செலவாகியுள்ளது.

""டிவிட்டர், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைதளங்களிலும் நான் இல்லை. ஆனால் நான் எங்கு செல்கிறேன்; என்ன பேசுகிறேன் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அப்படியே யாரோ "அப்டேட்' செய்து வருகிறார்கள். என் தனிப்பட்ட விஷயங்களை அம்பலப்படுத்தும் அந்த ஆசாமியின் மீது சைஃபர் கிரைமில் புகார் செய்யலாமா என யோசித்து வருகிறேன்'' என்கிறார் அஸின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.