ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: ஏழு கிலோ இளமை!

பாலிவுட் நடிகைகள் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டில் ஈடுபடுகின்றனர். அந்த முயற்சியில் கங்கனா ரனாவத்தும் ஈடுபட்டார். மாதவன் ஜோடியாக நடிக்கும் "தனு வெட்ஸ் மனு' என்ற

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:03 pm

ஜி. அசோக்

பாலிவுட் நடிகைகள் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டில் ஈடுபடுகின்றனர். அந்த முயற்சியில் கங்கனா ரனாவத்தும் ஈடுபட்டார். மாதவன் ஜோடியாக நடிக்கும் "தனு வெட்ஸ் மனு' என்ற படத்தை ஆனந்த் ராய் இயக்குகிறார். ஷூட்டிங்கின் போது கங்கனா ரனாவத்துக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு வாரக் கணக்கில் ஓய்வில் இருந்தார்.

இதனால் அவரது எடை 7 கிலோ கூடியது. உடலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர மீண்டும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே என அவர் சோகத்தில் ஆழ்ந்தார். இந்நிலையில் கங்கனாவை அவரது வீட்டில் நலம் விசாரித்த இயக்குநர்.

சதை போட்டு உடல் பெருத்து இருந்தார் கங்கனா. இயக்குநரைப் பார்த்ததும் பயம் தோய்ந்த குரலில் எப்படியாவது சில நாள்களில் உடல் எடையைக் குறைத்து விடுகிறேன் என்றாராம். ""அட அதெல்லாம் வேண்டாம் படத்தின் இடைவேளைக்குப் பின் நீங்கள் சற்று குண்டாகத்தான் இருக்க வேண்டும் அதனால் இன்னும் 7 கிலோ எடையை கூட்டுங்கள்'' என்றாராம். டைரக்டர் ஓ.கே. சொன்ன சந்தோஷத்தில் அந்த 7 கிலோ எடையை சீக்கிரமே எட்டிவிடுவார் கங்கனா. நடிகைகள் ரசிகர்களைக் கவர்வதற்கு உடையில் கவனமாக இருப்பார்கள். கங்கனாவோ

எடையில்!

உலகத் தமிழர்களுக்காக ஒரு பாடல்!

கவிஞர் வைரமுத்து எழுதிய உலகத் தமிழர்களுக்கான பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் தாஜ்நூர். ""தற்போது "எத்தன்', "சமுத்திரகனியின் போராளி', "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', "மல்லுக்கட்டு' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்துக்காக புதுமுயற்சியில் ஒரு பாடலை இசையமைத்து இருக்கிறேன்.

திருக்குறளின் காமத்துப்பாலில் உள்ள குறள்களைப் பாடலாக்கியிருக்கிறோம். இந்தப் பாடலை சின்னச் சின்ன மாற்றங்களுடன் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். முதல் படமான "வம்சம்' நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. சசியின் மாணவர் யுவராஜ் இயக்கும் ஒரு படத்திலும் இசையமைத்து வருகிறேன்.

இந்தப் படத்துக்காக மனுஷ்யபுத்திரன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். உலக தமிழர்களுக்காக வைரமுத்து எழுதிய பாடலுக்கு இசையமைப்பு முடிந்துவிட்டது. பாடலைக் கேட்டு வைரமுத்து பெரும்

மகிழ்ச்சி கொண்டார். செம்மொழி மாநாட்டு பாடலில் பாடாத பெரும்பாலானவர்களின் குரலில் இந்தப் பாடல் பதிவாகியுள்ளது. விரைவில் இந்தப் பாடலுக்கான காட்சியமைப்பும் பதிவாக உள்ளது என்றார் தாஜ்நூர்.

மணி.. மேனன்.. நகரம்!

""நேற்று கூட என் 19 வயது மகனிடம் சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவன் நிறைய விஷயங்களை என்னிடம் பேசுவான். தமிழ் சினிமாவின் ஓர் ஆண்டின் வருமானம் சில கோடிகள்தான். ஆனால் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு கிரானைட் தொழிற்சாலையில் வரும் வருமானம் சினிமாவைவிட பெரிது என ஒரு புள்ளி விவரத்தைச் சொன்னான். சிலர் பிரபலம் ஆவதற்கென்றே சினிமாவுக்கு வருகிறார்கள். பணம் இருந்தால் மட்டும் புகழைச் சம்பாத்துவிட முடியாது.

நல்ல படங்களைக் கொடுக்க முடியாத எவரும் புகழில்லாத ஆள்தான். சினிமாவின் குறி எல்லாம் தென் தமிழகத்தை குறி வைத்துதான் இருக்கிறது. ஆனால் நகரத்து கதைகள் பெரும்பாலும் இப்போது இல்லை. கௌதம் வாசுதேவ்மேனனும், என் கணவர் மணிரத்னமும்தான் நகரத்து வாழ்க்கையை படம் பிடிக்கிறார்கள்.''

கௌதம்வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள "வெப்பம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படி பேசினார் சுஹாசினி மணிரத்னம்.

ஸ்ருதி சேர்ந்ததா?

கமல்ஹாசன் படங்களில் முத்தக் காட்சிக்குத் தனி இடம் உண்டு. "புன்னகை மன்னன்', "மகாநதி', "குருதிப்புனல்' உள்ளிட்ட படங்களில் அவரின் முத்தக் காட்சிகள் பரபரப்பை எற்படுத்தின. அவரது பாணியில் ஹிந்தியில் சீரியஸ் கில்லர் என முத்திரை குத்தப்பட்டிருப்பவர் இம்ரான் ஹாஸ்மி. இவர் படம் என்றாலே ஹீரோயினுடன் கண்டிப்பாக முத்தக் காட்சி இருக்கும்.

இவரது முத்தக் காட்சிகளுக்காகவே தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்கள் மும்பையில் உண்டு. "தில் தோ பச்சா ஹே ஜி' என்ற படத்துக்காக இம்ரானுடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதி.

இம்ரானுடன் ஸ்ருதி கடற்கரையில் ஓடும் காட்சி, பைக்கில் போகும் காட்சி என இப்போதே ஸ்டில்கள் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. இம்ரான் படம் என்பதால் நிச்சயம் முத்தக் காட்சி இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.