ஆண்டுகள் ஆயிரம், ஆயிரம் கடந்தாலும் அணங்குகள் அங்கவையும், சங்கவையும் கண்கள் கலங்கிய கையறு நிலையில் இருந்து பாடிய துன்பம் தோய்ந்த புறநானூற்று வரிகளின் சித்திரமாய் விளங்கும் இக் கொடிய காட்சி காண்போரை மட்டுமல்ல, கேட்போரையும் கண்ணீர் சிந்த வைக்கும்.
வள்ளல் பாரி மூவேந்தர்களால் வஞ்சகமாய் கொலையுண்ட பின், அந்நாட்டு இளவரசிகள் அபலைகள் ஆனார்கள். ஒரு திங்கள் காலம் கடந்த பின் ஓர் இரவில் முழுநிலா நாளில் திங்களை நோக்குகிறார்கள் அக் கன்னியர்கள். கடந்த திங்களின் காலத்தில் இருந்த அவர்தம் நிலையினை எண்ணிப் பார்க்கிறார்கள்.
இதே வான்வெளி. அதே நிலா. அதே ஒளி மிகுந்த முழு வெண்நிலாவில் நாங்கள் எங்கள் தந்தையைப் பெற்றிருந்தோம். எங்களின் பறம்பு மலையும் எங்கள் வசமே! எவரும் வென்றிருக்க இல்லை. ஆனால், இன்றைய இந்த முழு நிலாவின்போது எமக்கு உரிமையான குன்றினை இழந்தோம். பறம்பு மலை மன்னனாகிய எங்கள் தந்தை பாரியை இழந்தோம். முற்றுகை இட்டு இருந்த மூவேந்தரும் வஞ்சகமாக அல்லவா தந்தையைக் கொன்று நாட்டையும், கைக் கொண்டனர் என்று அந்த அபலைச் சகோதரிகள் கண்ணீர் உகுத்த நிலையில் உதிர்ந்த இவ்வரிகள்தான் புறநானூற்றுப் பாடலாக வருகிறது.
நம் முன்னோர் காதல், வீரம், ஈகை போன்ற நல்ல குணங்களால் புகழின் உச்சியில் வாழ்ந்து இருந்தாலும், சில நேரங்களில், அழுக்காறினால் விளைந்த பகை காரணமாக வீரம் செறிந்த, வள்ளன்மை மிக்க பாரி போன்ற மன்னர்களையும் வஞ்சகமாக, போர் நெறி தவறிக் கொன்று அழியாப் பழி கொண்டார்கள் என்ற வரலாறும், கொலையாளிகளின் பெயர்கள் வருங்கால சந்ததியினர்க்குத் தெரிந்தால் பெயர் சொல்லி தூற்றுவார்களே என எண்ணித்தான் கொலை புரிந்த மன்னர்களின் பெயர்களை வரலாறு பதிவு செய்யாமல் விட்டிருக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


