நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்

தமிழில் முன்னணி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த த்ரிஷாவுக்கு இப்போது இங்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. வயதாகி விட்டதால்தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இது குறித்து த்ரிஷ

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:40 pm

மனோஜ் கிருஷ்ணா

தமிழில் முன்னணி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த த்ரிஷாவுக்கு இப்போது இங்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. வயதாகி விட்டதால்தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இது குறித்து த்ரிஷாவிடம் கேட்டால்...

""எனக்கு வயதாகி விட்டது என்பது உண்மைதான்.

இப்போது எனக்கு 29 வயது. சினிமா ஃபீல்டில் இதெல்லாம் ஒரு வயதா? 40 வயதைத் தொடப்போகும் ஐஸ்வர்யா ராய் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகைகள் தங்கள் உடலமைப்பை ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொண்டால் போதும்; அந்த ஃபிட்னஸ் எனக்கு இருக்கிறது.

இன்னும் சில வருடங்கள் வரை அதைத் தக்க வைத்துக்கொள்வேன். அதுவரை நடித்துக்கொண்டிருப்பேன். பிறகு, வாய்ப்பில்லை என்று யார் சொன்னது? தெலுங்கில் நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறேன். தமிழ் மொழியில் நடித்தால் மட்டும்தான் பிஸியான நடிகையா?'' என்கிறார்.

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல முகங்கள் கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகிறார். இதற்காக இளைஞர்களை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்டைத் தயார் செய்துள்ளார். தெலுங்கில் தயாராகவுள்ள இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தனது படங்களுக்கு வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து காட்சிகளைப் படமாக்குபவர் கே.வி.ஆனந்த். அந்த வகையில் சூர்யா நடிக்கும் "மாற்றான்' படத்துக்காக இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத குரோஷியா, ருமேனியா, செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

2012- புத்தாண்டை அஜித் தனது குடும்பத்துடன் சிங்கப்பூரிலும் ப்ரியாமணி தனது தோழியருடன் ஆஸ்திரேலியாவிலும் ரீமா சென், த்ரிஷா ஆகியோர் தங்களது தோழியருடன் கோவாவிலும் அஸின் தனது குடும்பத்தினருடன் கேரளத்திலும் கொண்டாடுகிறார்கள்.

தனது சிறப்பான நடிப்பாற்றலால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நந்திதா தாஸ், வழக்கமான கதையம்சம் உள்ள படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற கொள்கையுடையவர். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஃபர்கான் அக்தர், ஒரு கதையுடன் நந்திதா தாûஸ அணுகியிருக்கிறார்.

கதையைக் கேட்ட நந்திதா "இது போன்ற பொழுதுபோக்குக் கதையில் நடிக்க விருப்பமில்லை; மக்கள் பிரச்னையை மையமாகக் கொண்ட  கதையாக இருந்தால் மட்டும் சொல்லுங்கள்; சம்பளம் ஒரு பொருட்டல்ல' என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.