இப்படியாக சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வர, வீக்கம் மற்றும் வலி நன்றாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. காலையில் தடவப்பட்ட சூரண மருந்தால், அப்பகுதியிலுள்ள தேவையற்ற நீரின் அம்சம் வற்றி விடுவதால், மாலையில் உபயோகிக்கப்படும் எண்ணெய்யின் வீரியமானது, எளிதில் உள்ளே சென்று, மணிக்கட்டுக்குத் தேவையான நெய்ப்பை ஏற்படுத்தி, எலும்புகளில் ஏற்படும் உரசலைத் தவிர்த்து, வலுவையும் கூட்டும். இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ளும் நாட்களில், உள்ளங் கைகளை அதிகம் மேலே தூக்குவதையோ, தாழ்த்துவதையோ, அதிகம் வேலை செய்வதையோ தவிர்த்தல் நலம்.