நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: ரஷ்யா டு சிந்து சமவெளி!

பரபரப்பை உருவாக்க சர்ச்சைக்குரிய கதைகளை எடுப்பது சினிமாவில் யுக்தியாக கருதப்படுகிறது. இந்த யுக்தியை தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார் இயக்குநர் சாமி. "உயிர்', "மிருகம்' படங்களில் தகாத உறவை

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:07 pm

ஜி. அசோக்

பரபரப்பை உருவாக்க சர்ச்சைக்குரிய கதைகளை எடுப்பது சினிமாவில் யுக்தியாக கருதப்படுகிறது. இந்த யுக்தியை தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார் இயக்குநர் சாமி. "உயிர்', "மிருகம்' படங்களில் தகாத உறவை சொல்லி பரபரப்பு உண்டாக்கினார். இப்போது இயக்கியுள்ள "சிந்து சமவெளி' படத்திலும் தகாத உறவைச் சுற்றித்தான் கதையை அமைத்திருக்கிறார்.

""பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, சர்ச்சையை கிளப்பும் கதை இந்த மூன்றும்தான் படத்தின் வெற்றிக்கு அவசியம். இதே பாணியைத்தான் சின்ன சின்ன நடிகர்களை வைத்து அந்தக் காலத்திலேயே இயக்குநர் பாலசந்தர் படமெடுத்தார். மனித உணர்வுகளை வேறுபட்ட களத்தில் சொன்னதால்தான் அவர் வெற்றி பெற்றார். அதனால் அவரது பாணியில் படம் இயக்குகிறேன்.

நான் சர்ச்சைக்குரிய இயக்குநர் அல்ல. மனித வாழ்க்கையில் உள்ள விஷயங்களைத்தான் படமாக்குகிறேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய குறு நாவல் "ஃபர்ஸ்ட் லவ்'. இதை மையமாக வைத்துதான் இந்த கதையை உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.