/

சிறுகதை: நிழல்

ஒலிப் ப திவு அறை யின் முழுப் பகு தி யும் குளி ரூட் டப் பட் டி ருந் தது. முது குக் குப் பின் னால் மெல் லிய நீல வண் ணத் தில் திரை இருந் தது. அடர் நீலத் தில் சட்டை அணிந் தி ருந் தேன். டை கட் டியே தீர வேண

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:38 pm

ஆர்.சரவணன்

ஒலிப் ப திவு அறை யின் முழுப் பகு தி யும் குளி ரூட் டப் பட் டி ருந் தது. முது குக் குப் பின் னால் மெல் லிய நீல வண் ணத் தில் திரை இருந் தது. அடர் நீலத் தில் சட்டை அணிந் தி ருந் தேன். டை கட் டியே தீர வேண் டும் என் ப தால் கருப்பு வண் ணத் தில்...

""ரெடி... ஸ்டார்ட்.. த்ரீ.. டூ... ஒன்''

"" வணக் கம்.. இன் றைய முக் கி யச் செய் தி கள்''

இரு பது நிமி டம் வாசித்து முடிக் கை யில் பெரு மை யாய் இருந் தது. இன் று தான் முதன் மு தல் வாசிக் கி றேன். பதிவு செய் யப் பட்ட வீடியோ ஓடிக் கொண் டி ருந் தது. இந் நே ரம் என் முகத்தை மாவட் டம் முழு வ தும் பார்த் தி ருப் பார் கள்.

""ல, ள ரெண் டுக் கும் வித் தி யா சம் சரியா வர ணும்... மிளகு செல வுன்ற வார்த் தையை தினம் ஐம் பது முறை சொல் லிப் பாருங்க..''

""வாழைப் ப ழத் தோல் வழுக்கி கீழ்

வீட் டு கிழவி விழுந் தாள்..ன்றத நீங்க தினமும் ஒரு முறை சொல் லுங்க..''

என்று அவர் சொல் லி ய தைக் கேட் கா மல் சிரித் துக் கொண்டே...

""ஏங்க... சார்... புதுசா ஜவு ளிக் கடை, நகைக் கடை திறப்பு விழா வுக் கெல் லாம் நமீ தாவ மட் டும் தான் கூப் பி டு வாங் களா? என் னய மாதிரி மக் கள் மத் தில பிர ப ல மா ன வங் க ளை யும்...''

""ஏன்யா... இன் னிக் குத் தான் முதல்ல காமிரா முன் னால நின் னு ருக்க... அதுக் குள்ள ஆரம் பிச் சிட் டியா? ''

""சார்... நான் ரொம் பல் லாம் கேக்க மாட் டேன்... ஒரு ஐயா யி ரம்... பத் தா யி ரம் போதும்... யாரா வது கேட்டா சொல் லுங்க...''

அந் தத் தனி யார் டி.வி.யின் மேனே ஜர் முகத் தில் முட் டையை உடைத்து ஊற் றி னால் அது ஆம் லெட் ஆகும் அள வுக் குச் சூடே றி யதை உணர்ந்து மெல்ல நகர்ந்து வெளி யே றி னேன்.

வெளியே வந்து இரு சக் க ர வாகனத் தைத் தள் ளிக் கொண்டு நகர் கை யில், வாட்ச் மேன் வணக் கம் சொல் லு வான் என்று எதிர் பார்த் தேன். ம்ஹும்...

""நான் யாருன்னு தெரி யுமா வாட்ச் மேன்? இங்க இன் னில இருந்து நியூஸ் ரீடர்''

"" ஓ.கே சார்...'' என்று வணக் கம் சொல் லு வான் என்று எதிர் பார்த் தேன்.   மீண் டும்...

""அப் ப டின்னா இன்னா சார்...''

"" ம்...ம்... இன்னா நாற் பது... இனி யவை நாற் பது...''

"" நாப் பது பத் தாது சார்... இன் னும் கொஞ் சம் போட் டுக் கொடு''

இரு சக் கர வாக னத்தை ஓங்கி உதைக்க... அது கிர் ரென்று தன் கோபத்தை வெளிக் காட் டி ய படி பறந் தது.

இரவு பன் னி ரண் ட ரைக்கு மேல் இருக் கும். நாளை காலை நெய் வே லி யில் நடக் கும் நண் ப னின் திரு ம ணத் துக் குப் போக வேண் டும். இரண்டு மணி வாக் கில் இங் கி ருந்து பேருந்து பிடித் தால் போதும்.

""ஏங்க.. நெய் வே லிக் குப் போயி ருக் கீங் களா'' என் றாள் செல்வி.

""என் னம்மா... என் னம்மா... இப் ப டிக் கேட் டுட்டே...நான் ஒரு உல கம் சுற் றும் வாலி பன்'' என் றேன் தேங் காய் சீனி வா சன் குர லில்.

""ஆனா... உழ வர் சந் தைக் குப் போய் காய் கறி வாங்க மட் டும் தெரி யாது.''

""ஏம்மா.... உனக்கு இந் தக் கொல வெறி... ஒரு உல கப் புகழ் பெற்ற செய்தி அறி விப் பா ள ரான என் னைப் போய்... முட் டைக் கோஸýம், கத் தி ரிக் கா யும் வாங்க அனுப் ப றீயே... உன்ன வர லாறு மன் னிக் கா தும்மா''

என் றேன் மீண் டும் தேங் காய் குர லில்.

""ஒரே நாள் செய்தி வாசிச் சிட்டு இந்த அலப் பலா...உங்க ஒரி ஜி னல் குரல் லேயே பேசுங்க... அது மறந் து றப் போகுது... இல் லேன்னா யாரா வது தேங் காய் சீனி வா சன் குரல்ல...   என் னம்மா செல்வி...என் னோட வந் து டுன்னு... சொன்னா போனா லும் போயி டு வேன்''

""ஏம்மா...ஏன்...யாரா வது விரும்பி எறும் புப் புத் துல கைய விடு வாங் களா?'' என் றேன் மீண் டும் தேங் காய் குர லில். செல்வி தாங்க முடி யா மல் பாத் ரூ முக் குள் சென்று தாழிட் டுக் கொண் டாள்.

இரவு ஒன் ன ரைக்கு வீட்டி லி ருந்து வெளியே வந்து இரு சக் க ர வாகனத் தைக் கிளப் பி னேன். பேருந்து நிலை யம் அருகே இருக் கும் வாக னக் காப் ப கத் தில் விட் டு விட்டு இரண்டு மணிக் குள் பேருந் தைப் பிடித் து வி ட லாம்.

"" என் னங்க... ஹெல் மெட்... போட லயா'' செல்வி வீட் டைப் பூட் டிக் கொண்டே கேட் டாள்.

""நான் ஒரு உல கப் புகழ் பெற்ற நியூஸ் ரீடர்...என்னை... அது வும் இந்த நேரத் துல... எந் தப் போலீ ஸýம் பிடிக் காது... தைரி யமா வா''

""தெய் வமே.. எப் படி... இப் படி...''

என் ற படி செல்வி பின் ன மர வண் டி யைக் கிளப் பி னேன். மாமாங் கம் சாலையி லி ருந்து வளைந்து நெடுஞ் சா லைக் குள் சேர்ந்து கொஞ்ச தூரம் போனேன்.

வழி யில் காவல் துறை ரோந்து வாக னம் நின்று கொண் டி ருந் தது.

""ஏங்க... போலீஸ்...இதுக் குத் தான் அந்த கரு மத்த தலைல கவுத் துக் கிட்டு வாங் கன்னு சொன் னேன்''

""ஒரு உல கப் புகழ் பெற்ற''

நான் ஆரம் பித்து முடிப் ப தற் குள் காவல் து றைக்கு அரு கில் வந் து விட் டி ருந் தோம்.

""சார்...வணக் கம்...உங் கள மாதிரி பிர ப ல மா ன வங்க எல் லாம் இப் படி நேரங் கெட்ட நேரத் துல தனியா போகக் கூடாது... நீங்க முன் னால போங்க... போலீஸ் வேன் உங்க பின் னா டியே வரும்''

இவ் வாறு அவர் கள் சொல் வார் கள் என்று நான் நினைத் த தெல் லாம் கற் ப னை யா கவே போனது.

"" யார் சார் நீங்க? ''

""நான் ஒரு நியூஸ் ரீடர்''

""அப் ப டியா...எந்த டி.வி.ல? ''

டிவி யின் பெய ரைச் சொன் ன தும்,

""இல் லயே... இது வ ரைக் கும் நான் பார்த் தது இல் லையே...''

""டிவி பார்த் தது இல் லியா...சார்''

""இந்த இடக் குத் தான வேணாங் க றது'' தொடர்ந்து காவல்...

""இந்த நேரத் துல இவ் வ ளவு நகை யெல் லாம் போட் டுக் கிட்டு போலாமா? சரி...ஹெல் மெட் எங்க? ''

""ஸôரி...ஸôர்...மறந் துட் டேன். ராத் திரி நேரத் து ல தா னேன்னு''

""ஏன்யா...ராத் தி ரில அடி பட்டா..ரத் தம் வராம ஆப் பிள் ஜூஸô வரும்? ஒன் நாட் ஒன் ஹெல் மெட் கேஸ் ஒண்ணு எழு துய்யா... இதப் பாருங்க சார்...குடும் பத் தோட வந் த தால கேஸ் எழு திக் கிட்டு விட றேன்...அப ரா தத்தை நாளைக் குக் கோர்ட் டில கட் டி டுங்க...''

அவர் அடுத்த கேஸ் பார்க்க நகர, ஒன் நாட் டூ வந்து பெயர்...முக வரி... செல் நம் பர் என்று கேட் கத் துவங்க.. எனக்கு கண் ண னின் நினைவு வந் தது.

கைபே சி யைத் தட் டி னேன்.

""வணக் கம்...வணக் கம்...வணக் கம்...நான் ஃபோன எடுத் துட் டேன்''

""ஏன்டா ராத் திரி ரெண்டு மணிக் குக் கூட அபி ந யத் தோ ட தான் வணக் கம் சொல் லு வியா? ''

"" என்ன நண்பா...இந்த நேரத் துல? ''

"" ஒண் ணு மில்ல...போலீஸ் கிட்ட மாட் டிக் கிட் டேன்''

""அடப் பாவி''

""அடப் பாவி இல்ல...நான் ஒரு அப் பாவி'' என்று துவங்கி ஹெல் மெட் கேஸ்ல மாட் டிய கதை யைச் சொன் னேன்.

""சரி நண்பா... அந்த ஒன் நாட் டூ கிட்ட குடு''

""சார்...கொஞ் சம் பேசுங்க...'' என் றேன். ஒன் நாட் டூ விடம்.

""அய் யய்யோ.. எனக் குப் பேச வெல் லாம் வரா துங்க...கேஸ் எழுத மட் டும் தான் தெரி யும்''

""அய்யோ. செல்- ல என் நண் பர்...அவர் ஒரு வி.ஐ.பி.'' கண் ணன் அவ ரி டம் செல் லா டி ப டியே இருக்க...நான் அப் பாடா....கண் ணன் காப் பாற் றி னான் என் ற படி நிற்க...

கடை சி யில் ஒன் நாட் டூ கைபே சி யில்

""சரி...நீங்க...யாரு.... உங்க பேரு என்ன? '' என்று கேட்க என் காலடி நிலம் நகர் வது போலி ருந் தது.

ஒரு வழி யாக காவல் து றை யி டம் இருந்து விடு பட்டு இரண்டே முக் கால் பேருந் தில் ஏறி அமர்ந் தோம்.

""என் னங்க...சில பஸ்ல...நெய்வேலி டி.எஸ்.னு போட் டி ருக்கு? ''

""அது நெய் வே லிக்கு இன் ஷி யலா இருக் கும் செல்வி கண் டக் ட ரி டம்...

""நெய்வேலி ரெண்டு கொடுங்க''

""இது நெய்வேலி டவுன் ஷிப் போகுது சார்...''

""நெய்வேலி கிரா மம்னு ஒண்ணு இருக்கா? ''

""சார்... நீங்க நியூஸ் ரீடர் தானே? '' என் றார் கண் டக் டர்.

என் கன வில் வெள்ளை உடை தேவ தை கள் பறக்க...

"" கனவு காண ஆரம் பிச் சிட் டீங் களா...ஐநூறு ருபாய்ல மீதிய வாங் காம விட் டு றா தீங்க'' என் றால் செல்வி.

நடத் து னர் என் னைக் கடந்து போகும் போ தெல் லாம் நான் சிரிக்க...அவர் சிரிக்க...ரொம்ப்ப மகிழ்ச் சி யில் இருந் தேன்.

பாதி தூரத் தில் தேநீ ருக் காக பேருந்து நிற்க அவர் தேனீ ரு டன் என் ன ருகே வந் தார்.

என் குரல் வளம்... உச் ச ரிப்பு... பேசும் நடை... முகம்... பற் கள் என்று ஏதா வது ஒன்று அவ ரைக் கவர்ந் தி ருக்க வேண் டும்.

""சார்...நீங்க செய்தி வாசிக் கும் போது தலைல முடி அதி கமா இருந் தது...டோப்பா வெச் சி ருந் தீங் களா? ''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.