நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

க.பி. விவேகா!

  "கந்தசாமி' படத்தின் பாடல்களும் படமும் ஹிட் ஆனதில் படத்தின் பாடலாசிரியர் விவேகா உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இலக்கு குறித்து அவரிடம் பேசியபோது... ""ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:35 pm

மனோஜ் கிருஷ்ணா

  "கந்தசாமி' படத்தின் பாடல்களும் படமும் ஹிட் ஆனதில் படத்தின் பாடலாசிரியர் விவேகா உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இலக்கு குறித்து அவரிடம் பேசியபோது...

""ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்துவிட்டது என அர்த்தம்' என்பது வெளிநாட்டு பழமொழி. ஆசை திறமையாக மாறலாம். திறமை காட்ட வாய்ப்பு அமைய வேண்டும். வாய்ப்பு அமைய காலம் கனிய வேண்டும். காலம் கனிய வைத்த வாய்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும். அது "கந்தசாமி' படத்தின் மூலம் இப்போதுதான் எனக்கு முழுமையாக கை கூடியுள்ளது.

இந்த வெற்றிக்கு தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சுசிகணேசன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரே முக்கியக் காரணம். ஒருவருடைய வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமுமே வார்த்தைகளாய் வெளிப்படும். எனக்கான வாசிப்பும் வாழ்க்கை அனுபவமும் முழுக்க முழுக்க என்னுடையவை. அதை யாரும் நகலெடுக்க முடியாது. யாருடைய வாழ்க்கை அனுபவத்தையும் நான் நகலெடுக்க முடியாது. எனவே என் பாதையும் பயணமும் தனியாகவே இருக்கும்.

கி.மு., கி.பி., போல என்னுடைய வாழ்க்கைப் பாதையை க.மு (கந்தசாமிக்கு முன்) க.பி (கந்தசாமிக்குப் பின்) என பிரிக்கலாம். எனக்குக் கமர்ஷியல் எழுத்தும் வரும்; கவிதை எழுத்தும் வரும். அதற்கான பயிற்சியும் அனுபவமும் எனக்கு இருக்கிறது. காலம் அமையும்போது அதை நிரூபிப்பேன்'' என்று கூறும் விவேகா, தற்போது 70 படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். அவற்றில் 15 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.