ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: 'மாசிலாமணி'யால் ராசியான ஜோடி!

" காதலில் விழுந்தேன்' படத்துக்குப் பிறகு "மாசிலாமணி' படத்துக்கும் கிடைத்துள்ள வரவேற்பையடுத்து உற்சாகத்தில் இருக்கும் நகுலனுக்கு தெலுங்கில் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழில் ஒரு நிலையான இடத்தைப்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:25 pm

மனோஜ் கிருஷ்ணா

" காதலில் விழுந்தேன்' படத்துக்குப் பிறகு "மாசிலாமணி' படத்துக்கும் கிடைத்துள்ள வரவேற்பையடுத்து உற்சாகத்தில் இருக்கும் நகுலனுக்கு தெலுங்கில் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கும் வரை வேறு மொழிகளில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார். ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் வெளியான "மாசிலாமணி'க்குப் பிறகு நகுலன்-சுனேனா ஜோடிக்கு ராசியான ஜோடி என்ற பெயர் கிடைத்துள்ளது. இவர்களை தங்கள் படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் விரும்புவதால், அதற்கேற்ற "மசாலா' கதைகளை உருவாக்குவதில் கமர்ஷியல் இயக்குநர்கள் மும்முரமாயிருக்கிறார்கள்.

வாட்டத்தில் ஒருவன்! "ஆயிரத்தில் ஒருவன்' - ஆண்ட்ரியா, ரீமாசென் 2009-ம் ஆண்டிலிருந்து 7-ம் நூற்றாண்டு வரை பின்னோக்கிப் பயணிக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை உருவாக்கியிருக்கிறார் செல்வராகவன். "மெக்கனஸ் கோல்டு', "பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' போன்ற ஹாலிவுட் சாகசப் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 3000 துணை நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் பணியாற்றிய கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் ""இந்தப் படத்தில் துணை நடிகர்கள் கஷ்டப்பட்ட அளவுக்கு நாங்கள் யாரும் கஷ்டப்படவில்லை. அவர்கள் இல்லாவிட்டால் இந்தப் படமே இல்லை'' என துணை நடிகர்களை மனதாரப் பாராட்டி வருகிறார்கள். இதில் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மன்னர் வேடத்துக்காக வித்தியாசமான "கெட்-அப்'பை மேற்கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன் என்கிறது பட யூனிட். இது இவ்வாறு இருக்க... படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பாடல் வெளியீட்டின்போது படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ள தனுஷுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் போன்றவற்றால் "பருத்தி வீரன்' வட்டாரம் வாட்டத்தில் உள்ளது. பாலபரணி;வெற்றி பவனி பாலபரணி ஓர் இயக்குநருடன் பணியாற்றினாலே கருத்து வேறுபாடு, பிரச்னை என அந்தப் படத்திலிருந்து விலகிய பல சம்பவங்கள் ஒளிப்பதிவாளர்களின் வாழ்க்கையில் நடந்ததுண்டு. ஆனால் ஒரே நேரத்தில் 10 இயக்குநர்களுடன் பணியாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் "மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலபரணி. "எப்படி சாத்தியமாயிற்று?' எனக் கேட்டபோது... ""அதற்குக் காரணம் படத்தை இயக்கிய 11 வது இயக்குநர் ராசுமதுரவன்தான். படத்தில் நடித்த 10 இயக்குநர்களும் ஈகோ பார்க்காதவர்கள். அவர்கள் இயக்கிய படங்களிலேயே மற்ற கலைஞர்களுக்கு உரிய மரியாதை அளித்தவர்கள். அதனால் "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் பணியாற்றியபோது அனைவரும் என்னை இளைய சகோதரனாகப் பாவித்து ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் இந்தப் படத்துக்காக "சூப்பர் 16-எம்எம்' கேமராவை கையிலும் தோளிலும் சுமந்து நான் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்தக் கேமராவைப் பயன்படுத்தியதால் செலவு குறைந்ததோடு காட்சிகளும் துல்லியமாக அமைந்தன. இதையடுத்து "வெடிகுண்டு முருகேசன்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். 11 இயக்குநர்களுடன் பணியாற்றியதால் ஒரே நேரத்தில் 11 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவமும் கிடைத்துள்ளது. இந்த இயக்குநர்கள் அனைவருமே தமது அடுத்த படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்ய என்னை அழைத்துள்ளனர்'' என்றார் பாலபரணி.   மலை vs மலை   அருண்விஜய், வேதிகா அருண்விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் "மலை மலை'. கமர்ஷியல் இயக்குநர் எனப் பெயரெடுத்த ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கியுள்ளார். படம் பற்றி கேட்டபோது...

""தனது ஊரில் மலை போல இருக்கும் ஓர் இளைஞன் சென்னையில் மலை போல இருக்கும் ஒருவனுடன் மோதுகிறான். ஏன்? எதற்கு? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறோம். அருண்விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முழு ஆற்றலையும் இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில் அவரது முந்தைய மைனஸ் பாயிண்ட்டுகளைக் களைந்து களமிறங்கியிருக்கிறோம். வாலியின் பாடல்களுக்கு மணிசர்மா சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கதாநாயகி வேதிகா, வழக்கமான பொம்மை நாயகி போல் இல்லாமல் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை ரசிக்க வைத்திருக்கிறார். "மலை மலை' கமர்ஷியல் படங்களிலேயே புதிய ட்ரெண்டை ஏற்படுத்தும்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.