திரைக்கதிர்: எல்லோரும் பார்க்கக் கூடாது!
சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி வந்த "எட்டப்பன்' படத்தின் பெயர் "ரசிக்கும் சீமானே' என மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஆன்டிஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இதுவ


சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி வந்த "எட்டப்பன்' படத்தின் பெயர் "ரசிக்கும் சீமானே' என மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஆன்டிஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு க்ளாமராக நடித்திருக்கிறார் நவ்யா நாயர். கதையின் போக்குக்கு க்ளாமர் மிகவும் அவசியம் (!) என இயக்குநர் வற்புறுத்தியதால் சில கண்டிஷன்களோடு அவ்வாறு நடித்திருக்கிறாராம். ""நான் க்ளாமராக நடிக்கும்போது சம்பந்தப்பட்ட நடிகர், டைரக்டர், கேமராமேன் ஆகியோரைத் தவிர்த்து பட யூனிட்டில் வேறு யாரும் இருக்கக் கூடாது; படம் வெளியாகும் வரை க்ளாமர் ஸ்டில்களை மீடியாக்களுக்குத் தரக்கூடாது; படத்தின் விளம்பரங்களில் க்ளாமர் ஸ்டில்களைப் பயன்படுத்தக் கூடாது'' போன்ற கண்டிஷன்களைக் கூறி தாராளம் காட்டி நடித்திருக்கிறார் நவ்யா நாயர்.
முகம் சிவக்கும் முத்தழகு!
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் பரத்துடன் "ஆறுமுகம்' படத்தில் ஜோடி சேர்ந்துள்ள ப்ரியாமணி, தன்னை இளம் ஹீரோக்களின் நாயகியாகக் காட்டிக்கொள்வதற்காகவே தெலுங்குப் படத்தில் நடித்ததை விட இந்தப் படத்தில் அதிக க்ளாமராக நடித்திருக்கிறார். இருப்பினும் கதாநாயகன் முதல் பட யூனிட்டார் வரை அனைவரும் படத்தின் இன்னொரு முக்கிய சீனியர் நாயகியான ரம்யாகிருஷ்ணனின் நடிப்பையே சிலாகித்துப் பேசி வருவதால் அடிக்கடி முகம் சிவக்கிறாராம் முத்தழகு.
முதல்முறையாகப் புது"மேக்'
ரவிதேஜா, இலியானா, ஷாம் நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற "கிக்' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் தமிழ் உரிமையை எடிட்டர் மோகன் பெற்றுள்ளார். தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வரும் ஜெயம் ராஜா இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் முதல்முறையாக, தன்னுடைய தம்பி ஜெயம் ரவியைத் தவிர்த்துவிட்டு இன்னொரு ஹீரோவை வைத்துப் படத்தை இயக்கவுள்ளார் ஜெயம் ராஜா.
அதிக கிராஃபிக்ஸ் அதிகச் செலவு
ஜீவா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் "சிங்கம்புலி'. ஜீவா, வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரிலும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படுகின்றன. அதே போல ஜீவா நடிக்கும் படம் ஒன்றில் அதிக அளவில் கிராஃபிக்ஸ் இடம்பெறுவதும் இதுவே முதல்முறை. இந்தப் படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கும் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் ஆகிய இருவரும் கலைப்புலி எஸ்.தாணுவின் அண்ணன் மகன்கள் என்பதால் பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்கிறது பட யூனிட். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய சாய்ரமணி இந்தப் படத்தை இயக்குவதால் சித்தப்பாவிடம் "ஆளவந்தான்' அனுபவங்களைக் கேட்டிருப்பார் என நம்பலாம்.
யாரப்பா...டைரக்டர்?
50-வது படத்துக்காக எம்.ஜி.ஆர். ஃபார்முலா கதை ஒன்றை வைத்துக்கொண்டு யாரை இயக்குநராக்கலாம் என தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறது விஜய் வட்டாரம். அவருடைய 50-வது படத்தை இயக்குவது யார் என்ற பட்டியலில் ஜெயம் ராஜா, தரணி, கெüதம் மேனன் ஆகியோரோடு பேரரசுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அரை கோடிக்கு மேல் சம்பளம் பேசி தமன்னாவை கதாநாயகியாக புக் செய்துள்ளனர். விஜய் நடிக்கும் 49-வது படமான "வேட்டைக்காரன்' வெற்றி பெற்றால் 50-வது படத்துக்கும் எம்.ஜி.ஆரின் படப் பெயரையே வைக்க முடிவெடுத்துள்ளனர். "எங்க வீட்டு பிள்ளை', "மீனவ நண்பன்', "உரிமைக்குரல்' போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
அவரா? வேண்டவே வேண்டாம்!
"கண்ட நாள் முதல்' ப்ரியா, தான் இயக்கவுள்ள புதிய படத்தில் பாவனாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார். கதையைக் கேட்டு நடிக்கச் சம்மதித்த பாவனா "ஹீரோ யார்?' எனக் கேட்டிருக்கிறார். பிருதிவிராஜ் என்றவுடன் படத்தில் நடிக்க விருப்பமில்லை என பதிலளித்துவிட்டாராம். பிருதிவிராஜுடன் இணைந்து நடித்தால் தேவையற்ற வதந்திகள் வருவதுதான் படத்தில் நடிக்காததற்குக் காரணம் என பாவனா வட்டாரம் தெரிவிக்கிறது. இருப்பினும், அவரை சமரசப்படுத்தி நடிக்க வைக்க இயக்குநர் வட்டாரம் முயற்சி செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...