ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: வில்லாதி வில்லி!

எஸ்.ஜே.சூர்யா நடித்த "நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷாயாலி பகத், அடுத்து ஹிந்தியில் "கிரிக்கெட்' என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார். "வில்லத்தனத்தில் ஏன் விருப்பம்?' என்று

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:14 pm

மனோஜ் கிருஷ்ணா

எஸ்.ஜே.சூர்யா நடித்த "நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷாயாலி பகத், அடுத்து ஹிந்தியில் "கிரிக்கெட்' என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார். "வில்லத்தனத்தில் ஏன் விருப்பம்?' என்று கேட்டால்...

""கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் ஜாக்கிஷெராஃப், சஞ்சய்கபூர், ஷக்தி கபூர் உள்பட 16 பேர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பெண் கேரக்டர் என்றால் அது நான் மட்டும்தான். கதாநாயகி என யாரும் இல்லை. அதனால் வில்லி என்றாலும் நான்தான் பிரதான கதாநாயகியாகத் தெரிவேன். அதனால் தைரியமாக ஒப்புக்கொண்டேன். தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு ஏற்ற கதை அமைந்தால் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிப்பேன்'' என்கிறார். 

மூணாறில் படமான மூணார்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து "மூணார்' என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. ரஞ்சித், ரித்திமா, கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கே.தம்பிதுரை இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தைப் பற்றி கேட்டபோது...

""திருமணம் முடிந்து தேனிலவுக்குச் சென்றபோது தனது காதலனை வைத்து கணவனைக் கொன்ற ஒரு பெண்ணைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான் கதை. இந்தச் சூழ்நிலையில் கணவன் மீண்டும் வந்தால் என்ன நடக்கும்? கணவனைக் கொலை செய்யும் அளவுக்கு அந்தப் பெண் துணியக் காரணம் என்ன? என்பதை ஒரு நல்ல மெúஸஜுடன் சொல்லியிருக்கிறோம். ரஞ்சித் வித்தியாசமான வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ரவி தேவேந்திரனின் இசை படத்துக்குப் பெரிய பலம். மூணாறு, தேக்கடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இதுவரை யாரும் படமாக்காத லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். "மூணார்' வெளிவரும்போது இளம் தலைமுறையினரிடையே வாழ்க்கை, காதல், குடும்பம் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்'' என்றார். 

சேரன் மனம் ஆறியதா?





'ஆறுமனமே' - தீபக், நிக்கோல்

பிரபல இயக்குநர் சேதுமாதவனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுதீஷ்சங்கர்  "ஆறு மனமே' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தீபக், நிக்கோல், "நம் நாடு' கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் கே.எஸ்.ராஜன் உள்பட படத்தில் பணியாற்றிய பலரும் மலையாளிகள். "புதிய முயற்சிகளுக்குத் தமிழ் ரசிகர்கள் மட்டுமே ஆதரவளிக்கிறார்கள்; அதனால்தான் முதல் படத்தைத் தமிழில் தயாரித்ததாக' பாடல் வெளியீட்டின்போது தயாரிப்பாளர் கூறினார். அதே விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் சேரன் ""தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இப்படி பலரை வாழ வைத்தே தமிழர்கள் ஏமாளியாகிவிட்டார்கள். அதே சமயம் அத்தியாசியமான விஷயங்களில் கூட அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் செய்ய மறுக்கின்றன. இதை அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்ப் படவுலகுக்கு வருபவர்கள் தங்கள் மாநிலத்தாருக்கு உணர்த்த வேண்டும்'' என "பஞ்ச்' வைத்தார்.

விளம்பர இயக்குநரின் கதை!



'அறியான்' - சந்தோஷ், ராகினி திரிவேதி

ஒரு விளம்பரப் பட இயக்குநரை மையமாக வைத்து "அறியான்' என்ற புதிய படம் தயாராகிறது. தெலுங்கு நடிகர் சந்தோஷ், கன்னட நடிகை ராகினிதிரிவேதி நடித்துள்ள இந்தப் படத்தை புதியவர் பி.கார்த்திகேயன் இயக்குகிறார்.

""சினிமா இயக்குநர், டி.வி. இயக்குநர் உள்பட திரைப்படத்துறையில் உள்ள பலரைப் பற்றியும் பல்வேறு கதைகள் வந்துள்ளன. ஆனால் ஒரு விளம்பரப் பட இயக்குநரின் வாழ்க்கை பற்றி இதுவரை யாரும் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை. அத்தகைய துறையில் உள்ள ஒருவன் சந்திக்கும் பிரச்னைகளையும் அந்தத் தொழில் குறித்து பலர் அறியாத விஷயங்களையும் அறியச் செய்வதுதான் "அறியான்' படத்தின் கதை. ஆஸ்திரேலிய இசைக் கல்லூரியில் பயின்ற விக்ரம்வர்மன் இசையமைக்கிறார். "அறியான்' தமிழ் சினிமாவின் "ஹைடெக் ஃபேன்டஸி ஃபிலிம்' என்ற பெயரைப் பெறும்'' என்கிறார் இயக்குநர். 

ரீமேக் படத்தில் ரீமிக்ஸ்!





பாலைவனச்சோலை- அபிநய், கார்த்திகா

சூப்பர் ஹிட் "பாலைவனச்சோலை' 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் எஸ்.தயாளன் இயக்கும் இந்தப் படத்தில் சுஹாசினி வேடத்தில் "நம்நாடு' கார்த்திகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நிதின் சத்யா, சஞ்சீவ், அபிநய், சத்யன், சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""இது ரீமேக் படமாக இருந்தாலும் இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பல மாற்றங்களைச் செய்திருக்கிறோம். பிரபல ஹிட் படத்தை ரீமேக் செய்கிறோமே; சரியாக வருமா? என ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஒரிஜினல் படத்தில் நடிக்கும்போது அதில் நடித்த பலரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள்தான். இந்தப் படத்தில் ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்கள்தான் நடித்திருக்கிறார்கள். அதனால் பல காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். இந்த ரீமேக் படத்தில் "ஆளானாலும் ஆளு...', "மேகமே மேகமே...' என்ற இரண்டு பாடல்களை மட்டும் ரீமிக்ஸ் செய்திருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.