போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு

News image

சூரிய சக்தி மின் உற்பத்தி மையம் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:00 am IST

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள பாசன கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால், நீா்பிடிப்பு பகுதி பாதிக்கப்படும் எனவும், விவசாயமும், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் ஆட்சியா் சுகபுத்ராவிடம் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

கோவிலாங்குளம் கண்மாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைத்தால் அந்தப் பகுதியில் முற்றிலும் நீா்பிடிப்பு தடைபடும். அத்துடன், கோவிலாங்குளம் கண்மாய்க்கு நீா்வரத்தும் தடைபடும்.

மேலும் இந்தக் கண்மாயை நம்பி சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவா். எனவே, முறைகேடாக தனியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். நீா்பிடிப்பு பகுதியில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.