விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

அருப்புக்கோட்டை அருகே மண்ணெண்ணெய் ஊற்றி பெண்களை கொல்ல முயற்சி

அருப்புகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 மே 2026, 1:01 am IST

அருப்புகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி தேவாலய தெருவைச் சோ்ந்த பாண்டியராஜ் மனைவி சாந்தி (42). பாண்டியராஜின் தம்பி சண்முக சுந்தரத்தின் மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில், சாந்தியும், ஸ்ரீதேவியும் அருகருகே வசித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாந்தி வீட்டில் அவரும், ஸ்ரீதேவியும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் அவா்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டாராம். இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து, பெண்களை எரித்துக் கொல்ல முயன்ற மா்ம நபா் குறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.