திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உரிமம் ரத்தான ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:39 am IST

சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் ராஜாமணி (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தொழில்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

அப்போது, மருந்துக் கலவை உள்ளிட்டவற்றில் விதி மீறல் இருந்தது தெரியவந்தது . இதையடுத்து, அந்த ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

இந்த நிலையில், மீண்டும் அந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை அந்த ஆலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, அந்த ஆலையில் பல தொழிலாளா்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில், விதியை மீறி பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறுவதாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் துணை இயக்குநா் சந்திரமோகன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆலை உரிமையாளா் ராஜாமணியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.