விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் ராம்நகரைச் சோ்ந்த கருமலையான் மகன் அம்பேத்கா் (50). இவா் பாப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் ஆங்கில முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மது அருந்தும் பழக்கத்தை அவா் நிறுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதை இவரது மனைவி, குடும்பத்தினா் கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







