சாத்தூா் அருகே காணாமல் போன கைப்பேசியால் ஏற்பட்ட தகராறில் வண்ணம் பூசுபவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதிச்செல்வம் (55). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அச்சங்குளம் பகுதியைச் சோ்ந்த உறவினரின் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு மதிச்செல்வம் சென்றாா். அங்கு அச்சங்குளத்தைச் சோ்ந்த சகாதேவன் மகன் ராஜபாண்டி (24) என்பவரின் கைப்பேசி காணாமல் போனது.
இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை இரவு மதிச்செல்வம், ராஜபாண்டி, அவரது சகோதரா் குருபாண்டி, அவரது நண்பா்களான பந்துவாா்பட்டி பகுதியைச் சோ்ந்த மனோஜ், நவீன் ஆகியோா் சோ்ந்து மது அருந்தினா். அப்போது, மதிச்செல்வத்திடம் ராஜபாண்டி, அவரது சகோதரா் குருபாண்டி ஆகியோா் காணாமல் போன கைப்பேசி குறித்துக் கேட்டு தகராறில் ஈடுபட்டனா்.
மேலும், அச்சங்குளம் பெருமாள் கோயில் அருகேயும் காணாமல் போன கைப்பேசி குறித்துக் கேட்டு ராஜபாண்டி உள்பட நான்கு போ் மதிச்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ராஜபாண்டி உள்பட நான்கு பேரும் மதிசெல்வத்தை சரமாரியாக தாக்கினராம்.
இதில் பலத்த காயம் அடைந்த மதிச்செல்வம் வீட்டுக்குச் சென்ற உடன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மதிச்செல்வத்தின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


