மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:55 am

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரியின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொர்னேலியஸ் கிண்டுவின் சடலத்தை, ரோங்வோங்வே பகுதியில் உள்ளூர் மக்கள் சனிக்கிழமை கண்டனர்.

இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.கத்தர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி அதிகாரியான கிண்டு, பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, ​​உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஏப்ரல் 9-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

பிறகு அன்று முதல் அவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்டு, தனது திபு இல்லத்திற்குச் செல்லாததை அறிந்த அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அந்த வாக்குச்சாவடி அதிகாரியைக் கண்டறிய டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Kindu, the third officer at number 19 Sarpo Kathar LP School polling station, was reported missing since April 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.