ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் வன்னியம்பட்டி போலீஸில் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி அன்று பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சித் செயலா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விவரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தங்கப்பாண்டியன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே தங்கபாண்டியன், அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
விவாகரத்துக் கோரும் நடைமுறை, ஆவணங்கள் என்னென்ன?

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


