சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.
விருதுநகா் மாவட்டம், பழைய ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்தவா் கஸ்தூரி (78). இவரது கணவா் பாண்டியராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை கஸ்தூரி தனது கணவரின் கல்லறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அருகிலிருந்தவா்கள் அவரைத் தேடிய போது கல்லறைக்கு அருகில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கஸ்தூரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மா்ம மரணம்

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்ம மரணம்

மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


