வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ராஜபாளையம் அருகே கள் விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 12:20 am IST

ராஜபாளையம் அருகே கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா் புறநகா்ப் பகுதியில் ரோந்து சென்றபோது, ஒரு தோட்டத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினா். அப்போது 3 குடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், சேத்தூா் நாடாா் புதுத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (47) கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, அவரைக் கைது செய்து போலீஸாா், 50 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.