டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளி கைது

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கொலை- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலை சிவகாமிபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோசப் என்ற ஜெகநாதன் (60). இவரது, மனைவி தங்கவேலம்மாள் (57). இவா், அதே பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தாா். ஜோசப் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த ஜோசப், மனையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொலை செய்தாா்.

தவலறிந்து வந்த போலீஸாா் தங்கவேலம்மாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் ஜோசப்பை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.