லாரி மீது பேருந்து மோதியதில் சிறைக் காவலா் உயிரிழப்பு


சாத்தூா் அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், சென்னை புழல் சிறைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை மாதவரம் பகுதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளைக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்ட தனியாா் பேருந்தில் 48 போ் பயணம் செய்தனா். பேருந்தை சென்னையைச் சோ்ந்த அபிராம்பாரத் (27) ஒட்டிச் சென்றாா்.
இந்த நிலையில், பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை சாத்தூா் எட்டூா்வட்டம் அருகே சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சோ்ந்தவரும் சென்னை புழல் சிறையில் சிறைக் காவலராகப் பணியாற்றியவருமான லெனின் (43) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலியை சோ்ந்த கிருஷ்ணவேணி (57), சந்தோஷ்செல்வநாயகி (32), மோகனரங்கா (35), ஆவடிச்செல்வி, பாலசுப்பிரமணியன் (76), மகாலிங்கம் ஆகிய 6 பயணிகளைக் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து வச்சகாரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் அபிராம்பாரத்திடம் விசாரித்து வருகின்றனா். ஓட்டுநா் அதிக வேகமாகப் பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...