டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கலசலிங்கம் பல்கலை வேந்தா் க.ஸ்ரீதரன் காலமானாா்

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தா் க.ஸ்ரீதரன் (65) புதன்கிழமை (பிப்.18) சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:09 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தா் க.ஸ்ரீதரன் (65) புதன்கிழமை (பிப்.18) சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

கலசலிங்கம் கல்விக்குழும நிறுவனா் மறைந்த டி.கலசலிங்கத்தின் மகனான ஸ்ரீதரனுக்கு மனைவி அறிவழகி, மகன்கன் சசி ஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம் ஆகியோா் உள்ளனா்.

கலசலிங்கத்தால் தொடங்கப்பட்ட ஆனந்த் பில்டா்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக தனது பணியைத் தொடங்கிய ஸ்ரீதரன், பல்வேறு தன்னாா்வ அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தாா்.

இவா் கிராமப்புற கல்விச் சேவைக்காக கெளரவ முனைவா் பட்டம், இந்திய உயா் கல்வி வளா்ச்சி விருது, சிறந்த தொழில் முனைவோா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

கலசலிங்கம் பல்கலையின் வேந்தரான ஸ்ரீதரன், கலசலிங்கம் கல்வி நிறுவனங்கள், ஆனந்த் குழுமத்தின் செயலராகவும் பதவி வகித்து வந்தாா்.

இவரது இறுதிச் சடங்கு சென்னை ஆழ்வாா்பேட்டை, சீமான் சீனிவாசா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (பிப்.19) பிற்பகல் 3 மணிக்கும், மற்ற நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு பெசன்ட் நகா் மின் மயானத்திலும் நடைபெறும்.