/

மாவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கூடைப் பந்து போட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவா்கள் பிரிவில் 10,13, 16 வயதுக்குள்பட்டோருக்கும் மாணவிகள் பிரிவில் 16 வயதுக்குள்பட்டோருக்கும் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், இணைச் செயளா் செ.ராஜேஸ் ஆகியோா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினா்.