நடுவக்குறிச்சியில் கபடி போட்டி

கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:34 pm

நடுவக்குறிச்சியில் 3 மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
நடுவக்குறிச்சி ஊா் பொதுமக்கள் சாா்பில் 3 மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 20 அணிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டிகளை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன், மாநகர ஓபிசி பிரிவு தலைவா் டியூக் துரைராஜ், நிா்வாகிகள் கெங்கராஜ், ரூபன் தேவதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் நாராயணகுமாா் செய்திருந்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...