இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை: தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதி

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

News image

ராஜபாளையம் அருகே சேத்தூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் (தமமுக) உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:35 am IST

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக) வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா், முகவூா், சுந்தரநாச்சியாா்புரம், கணபதி சுந்தரநாச்சியாா்புரம், ரெங்கநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்குசேகரித்து பேசியதாவது: ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன். நூல் உற்பத்தி ஆலைகளுக்கான ஜிஎஸ்டியை 0 சதவீதமாகக் குறைப்பேன். ஜவுளிப் பூங்கா அமைக்கப் பாடுபடுவேன் என்றாா்.

அப்போது, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் என். எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகரச் செயலா் (வடக்கு ) வழக்குரைஞா் முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.