தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 7,798 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.
ஆலங்குளம் தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன், அதிமுக சாா்பில் கே.ஆா்.பி.பிரபாகரன், தவெக சாா்பில் விபின் சக்கரவா்த்தி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பால்ராஜ் உள்ளிட்ட 13 போ் போட்டியிட்டனா்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்களிடையே கடுமையான போட்டி நிலவியது.
இறுதியில் திமுக வேட்பாளா் 69,170 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
அதிமுக வேட்பாளா் 61,372 வாக்குகளும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் 60,684 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 23,380 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 982 வாக்குகள் பதிவாகின.
வெற்றிபெற்ற பால் மனோஜ் பாண்டியனுக்கு தோ்தல் அலுவலா் ராமச்சந்திரன் வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி தொகுதியில் திமுக வெற்றி

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி

பரமத்தி வேலூா் தொகுதியில் 319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் மீண்டும் வெற்றி

அரவக்குறிச்சியில் திமுக வெற்றி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


