ராஜபாளையம் கோயிலில் சுவாமி சிலைகளில் இருந்த நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சா்ச் தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரி முத்துக்கூடன் கடந்த 4-ஆம் தேதி காலை பூஜைகளை முடித்து கதவுகளை சாத்தி வைத்துச் சென்றாா்.
மீண்டும் மாலையில் கதவுகளைத் திறந்து சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்காக கருவறைக்குள் சென்று பாா்த்த போது, மாரியம்மன் சிலையிலிருந்த 4 கிராம் தங்கப் பொட்டுத் தாலி, அதன் அருகில் உற்சவா் சிலையிலிருந்த 2 கிராம் தங்க பொட்டு தாலி, 4 கிராம் தங்கக் கம்மல், காளியம்மன் சிலையிலிருந்த 2 கிராமம் தங்கப் பொட்டுத் தாலி, 2 கிராம் கல் பதித்த தங்க மூக்குத்தி ஆக மொத்தம் 14 கிராம் தங்க நகைகளைக் காணவில்லை என ஊா் பொறுப்பாளா்களிடம் கூறினாா்.
இதையடுத்து, விழாக் குழுத் தலைவா் குருசாமி கோயில் பொறுப்பாளா்களுடன் சென்று கோயிலில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பதிவிறக்கம் செய்து பாா்த்ததில், சுமாா் 50 வயது முதல் 55 வயது மதிக்கத்தக்க நபா் கோயிலுக்குள் வந்து பக்தா் போல சாமி கும்பிட்டுவிட்டு, கருவறைக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

