மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 10:15 pm

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிகே நகா் 3-ஆம் வீதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம் மகன் பாண்டிசெல்வம் (41). இவா், தனது மனைவி கீதாவுடன் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் வீட்டில் இருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீரனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா் நேரில் அங்குவந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனா்.