/

செ.குளோரியான்

பாடல் - 11

ஆறா மத யானை அடர்த்தவன்தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே.

மாறாத மதத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையை வென்ற எம்பெருமானை, சேறு நிறைந்த வயல்களையுடைய தென் குருகூர்ச் சடகோபன் நூறு நூறாக ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும், வானவர்களின் இனிய உயிரான எம்பெருமானைப் போற்றுகின்றன, இவற்றைப் பாடினால், சிங்கம்போன்ற எம்பெருமானைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.