/

செ.குளோரியான்

பாடல் - 7

உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம்தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா,
மிகும் தானவன் மார்பு அகலம் இரு கூறா
நகந்தாய், நரசிங்கம் அது ஆய உருவே.

உன்னை மகிழ்ச்சியோடு எண்ணுகின்ற என்னுடைய உள்ளத்தின் மையத்தினுள்ளே அமர்ந்து தங்கியவனே, குற்றமற்றவனே, மிடுக்கான இரணியனுடைய மார்பு இரண்டாகும்படி செய்த நகத்தை உடையவனே, நரசிம்மனாகத் திரு அவதாரம் எடுத்தவனே.

பாடல் - 8

உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன், எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை, தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே.

மேலெழுந்த பார்வையில், ஆறு புறச்சமயங்களும் ஒரேமாதிரி தோன்றுகின்றன, எனினும், அவற்றால் எம்பெருமானை அசைக்க இயலாது, அதற்கு அவனே தடையாக நிற்கிறான், எல்லாப் பொருட்களிலும் அருவாகி நிற்பவன் அவனே, தேவர்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவனும் அவனே, அத்தகைய கண்ணனை நான் கண்டுகொண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.