

பாடல் - 7
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாகம் வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே.
மனித, சிங்க உருவங்கள் ஒன்றாகச் சேர்ந்த நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனின் மார்பைத் தன்னுடைய கூர்மையான நகங்களாலே பிளந்தவன் எம்பெருமான், அவன் எழுந்தருளியிருக்கிற பரமாகாசம் எனப்படுகின்ற வைகுந்தத்தைக் காண்பதற்கு என் மனம் எண்ணுகிறது, இரவுபகலாக அதைமட்டுமே சிந்திக்கிறது.
பாடல் - 8
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள்நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே.
நம்முடைய நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளையும் இல்லாமல் செய்கிற பெருமான், அதன்மூலம், நாம் மீண்டும் இன்னோர் உடம்பில் புகுந்து இன்னொரு பிறவி எடுக்காதபடி செய்து நம்மை உய்யக்கொள்கிறவன், அத்தகைய எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் அருள்கிற திருவேங்கடமலை இந்தப் பரந்த உலகத்திலே உள்ளது.தேவர்களெல்லாம் அங்கே சென்று கை தொழுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

