/

செ.குளோரியான்

பாடல் - 5

மனமே, உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன், இது சோரேல் கண்டாய்,
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே.

மனமே, வலிய வினைகளைச் செய்தவனான நான் உன்னிடம் கெஞ்சுகிறேன், உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், இதைக் கேட்டு நட, சோர்ந்துவிடாதே, கொல்லையிலே சிறந்து விளைந்த அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமான், தனக்கு இணையாக யாருமில்லாத பிரான், அவரை நாம் அடைவோம்.

பாடல் - 6

அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்,
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே,
கடைவதும் கடலுள் அமுதம், என் மனம்
உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே.

எம்பெருமான் அடைவது, அழகிய மலரிலே வீற்றிருக்கும் திருமகளின் தோள்களை, அவர் புரிவது, அசுரர்களோடு கடுமையான போர்களை, அவர் கடைவது, பாற்கடலிலே அமுதத்தை. என் மனம் முழுக்க உடைவது, அவர் ஒருவருக்காகமட்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.